Skip to main content

Posts

Showing posts from January, 2010

கவிதை

டம்மி இசை வீட்டிலிருந்து 15 நாட்கள் விடுப்புவேண்டி இருப்பதால் அமானுஷ்யத்தின் துணைகொண்டு ஒரு “டம்மிஇசையை” உருவாக்கினேன். அதற்கு என் நடை உடை பாவனைகளை கற்பித்தேன். ஒரு அலைபேசியை கையளித்தேன். மனமுருக அதன் கரங்களைப் பற்றுதலால் நன்றி பகன்று விடைபெற்றேன். மறுநாளே அழைத்த அது என் மகனின் வீட்டுப்பாடங்கள் ரொம்பவும் கடினமாக இருப்பதாக சொன்னது. நாளுக்கு நாள் அதன் புகார்கள் அதிகரித்துக் கொண்டே வந்தன. புதிததாய் தனக்கு மூச்சுமுட்டும் வியாதி கண்டிருப்பதாகவும் சீக்கிரம் வந்துவிடும் படியும் அது நச்சரிக்கத்துவங்கியபோது நானதனை கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டினேன். அமானுஷ்யக்காரரிடம் சொல்லி விடுவதாக மிரட்டினேன். பிறகு அதன் அழைப்புகள் நின்று விட்டன. விடுமுறையின் ஏகாந்தம் முடியும் கடைசி நாளில் என் வருகையைத் தெரிவிக்க நான் அதை அழைக்க , ஒரு பெண் குரல் சொன்னது “நீங்கள் தொடர்புகொள்ளும் வாடிக்கையாளர் பிரபஞ்சத்திற்கு வெளியே இருக்கிறார்” நன்றி; கல்குதிரை .

கவிதைகள்

சித்தாந்தங்களின் துப்பாக்கிகள்- 1 அவனிடம் இருந்த துப்பாக்கி சமயம் பார்த்து வெடிக்காமல் போனது. அவன் அதை துடைத்து எண்ணையிட்டு நன்றாகவே பராமரித்து வந்தான். இருந்தும் அது வெடிக்கவில்லை. விசையை அழுத்திப் பார்த்தான். தோட்டாக்களை ஆராய்ந்தான். எல்லாம் சரியாகவே இருந்தது. பிறகு அதை ஒரு துப்பாக்கி பழுதுபார்ப்பவனிடம் கொண்டுபோய் கொடுத்தான். அவன் தீர பரிசோதித்துவிட்டு எல்லாம் சரியாகவே இருக்கிறது என்று திருப்பிக் கொடுத்தான். எல்லாம் சரியாக இருந்தும் ஒரு துப்பாக்கி ஏன் வெடிக்கமாட்டேன் என்கிறது என்றிவன் யோசித்த வேளையில் பெருங்குரலில் ஒரு சிரிப்பொலி கேட்டது. சித்தாந்தங்களின் துப்பாக்கிகள்-11 அதை நோக்கி சுட்டபடி தொடர்ந்து முன்னேருங்கள் என்றொரு ஆணை பிறந்தது. சர்வ வல்லமை படைத்த அது ஏதோ ஒரு மந்திரத்தை முணூமுணுத்தது. துப்பாக்கிகள் ஒன்றையொன்று சுட்டுக் கொண்டன. அது தொடர்ந்து முன்னேறியபடி இ ருக்கிறது. சித்தாந்தங்களின் துப்பாக்கிகள்-111 அந்த ஊரில் எல்லோரும் அவரை துப்பாக்கி சாமி என்றே அழைத்தனர். அடிக்கடி இரவுகளில் வீறிடும் குழந்தைகளுக்கு அவர் தன் துப்பாக்கியிலிருந்து தாயத்துகள் செய்து தந்தார். ரவைகளை உருக்கி குளு