Skip to main content

Posts

Showing posts from May, 2010

தூரன் குணாவின் நூல்விமர்சனம்

ஒளிமீன்கள் துள்ளும் கடலும் TN 37 T 7014 ல் ஒரு சாதாரணனும் -தூரன் குணா இசையின் உறுமீன்களற்ற நதி தொகுப்பை முன்வைத்து. இரண்டாயிரங்களுக்குப் பின்னாலான தமிழ்க்கவிதையை மீநவீன கவிதை எனலாம்.தொண்ணூறுகளில் ஆழ அகலத்தோடு தமிழ்க் கவிதையில் பேசப்பட்ட உலகமயமாக்கல்,பாலியல் சார்ந்த உள்ளடக்கங்கள் இன்று வேறுவிதமான பரிமாணத்தை எய்திவிட்டது.தொண்ணூறுகளின் ஒரு பத்து பெருங்கவிஞர்கள் தமிழ்க்கவிதை வரலாற்றுப்பாதையில் நடுகற்களாக மாறிக்கொண்டிருக்கையில் இரண்டாயிரத்திற்கு பின்னாலான இளம் கவிஞர்கள் அவர்களுக்கே உரிய தனித்துவங்களுடனும் பலவீனங்களமுடனும் மெல்ல முன்வரிசைக்கு வந்துகொண்டிருக்கிறார்கள். நான் ஒன்று அல்லது இரண்டு தொகுப்புகளை வெளியிட்டுள்ள ஒரு ஆறேழு கவிஞர்களை குறிப்பிடுகிறேன்( நீங்கள் பெயர்களை எழுதிக்கொள்ளலாம்).உலகமயமாக்கல் வெகு ஸ்திரமாகி அது தேசிய இனங்களின்,மொழிகளின் விழுமியங்களை அழித்துவிட்டபின் இந்த இளம்கவிஞர்களுக்கு தம் கவிதையில் தனித்த நிலப்பரப்பு ஒன்றை எய்துவது பெரும்சவாலானதாக இருக்கிறது.மாறாக சிதைவுற்ற பிம்பங்கள்,உடைவுண்ட நிலப்பரப்பு,மாறிவிட்ட அறங்களை எதிர்க்கொள்ளுதல் என்று அவர்களளுடைய கவிதையின் நிலப்பரப்ப