Skip to main content

Posts

Showing posts from August, 2010

உப்புபுளிமிளகாயார்

உப்புபுளிமிளகாய் மறுக்கப்படுவதாக தீர்ப்பு சொன்ன நாளில் அவன் கவிச்செருக்கில் ஓங்கரித்தான். தான் உப்பென்றெழுத உப்பாகும் என்று கூவினான். ஆனால் அப்படியெதுவும் ஆகவில்லை. நான் ஒரு மோசமான கவியா என்று வானத்தை நோக்கிக் கத்தினான். உடைந்து உடைந்து அழுதான். உப்புபுளிமிளகாய், உப்புபுளிமிள்காய் என்று உளறி உளறி பித்தானான் காடுகரைகளில், தோட்டவயல்களில், வீட்டுச்சுவர்களில்,வனத்து மரங்களில் கோவில்பிரகாரங்களில், நடைபாதைவழிகளில், ஆற்றில், குளத்தில் ஊருணி நீரில் எங்கும் எப்போதும் ஒரு கிறுக்கு ஓவியனைப் போல உப்புபுளிமிளகாய் என்று எழுதிக்கொண்டிருந்தான். கடைசியில் கலைவாணி கண் திறந்தாள். அவன் உப்பென்றெழுதியததெல்லாம் உப்பாகி ஊர் உப்புபுளிமிளகாய்க்குள் மூழ்கியது. ... அவன் பித்தாகி அலைந்த காலங்களில் எழுதிய 400 பாடல்கள் கி.பி.6 ம் நூற்றாண்டில் பூவூர்கிழார் என்பவரால் "அறநானூறு" என்கிற பெயரில் தொகுக்கப்பட்டது. கவிஞரின் பெயர் பற்றிய குழப்பங்கள் நிலவியதால் எழுதியவ