Skip to main content

Posts

Showing posts from June, 2012

என் கழுத்துநரம்பு முறுக்குக் கம்பியாலானது

என் பள்ளித்தோழன் தன் உள்ளங்கைக்குள் ஐந்து தேன்முட்டாய்களை காட்டிமறைத்த போது நான் முதன்முதலாக என் தலையைத் திருப்பிக்கொண்டேன் என்று நினைவு பிறகு எத்தனையோ முறை வெடுக் வெடுக்கென்று திருப்பிக் கொண்டேன் என் காளைப் பருவம் முழுவதும் வெட்டி வெட்டி இழுத்தேன் எத்தனை திருப்பிற்கும் அறுந்து போகாத என் கழுத்து நரம்பு ஒரு மருத்துவ அதிசயம் நாம் என்னவோ கடவுளை கண்டபடி திட்டுகிறோம் உண்மையில் அவர் ஒரு பேருபகாரி இந்த வாழ்வில் ஒரு முறை கூட தலையைத் திருப்பிக் கொள்ளாதவர் தவிர மற்ற எல்லோரும் ஒரு சேர எழுந்துநின்று அவர்க்கு நன்றி சொல்லுங்கள் அவர் நம் தலையை திருப்பிக் கொள்ளுமாறு வைத்ததின் மூலம் அதை வெடித்துவிடுவதினின்று காத்தார்.

ஓட்டைவாளியில் நீர்சுமப்பவன்

இசையின் “ சிவாஜிகணேசனின் முத்தங்கள் “ ஐ முன் வைத்து...                                                                                                                             - சாம்ராஜ்- பத்து மணிக்கெல்லாம் நடைசாத்தப் பழகியவர்களின் பாழ்நிலத்தை நாம் பாதுகாக்கத்தான்  வேண்டுமா ?  என்று கவிஞன் லிபிஆரண்யாவின் கவிதையொன்று முடியும். அப்படியான நிலம்தான் இது. முரன்பாட்டின் முக்கோணம் இந்நிலம், அன்றாடம் அந்த முரன்பாடு நம் சட்டைபிடித்து உலுக்குகிறது. சமயங்களில் நம்மைப் பார்த்து கேலியாய் நகைக்கிறது.. பேண்ட்களையோ, உள்ளாடைகளையோ நனைக்கிறது. பாலத்திலிருந்து குதிக்கச் சொல்கிறது. கொலை செய்யச் சொல்கிறது. கேவலப்படுத்துகிறது. பின்னிரவில் எழுப்புகிறது. பேயாய் பகலில் அலைய வைக்கிறது. பிரேதங்களை வாஞ்சையோடு பார்க்க வைக்கிறது. மிருகக்காட்சிசாலை கூண்டுக்கெதிரே வெகுநேரம் நம்மை நிறுத்தி வைக்கிறது. அன்பை  நல்ல பாம்பின் நாகரத்தின கல்லாக்குகிறது. இந்தக் கொடடூர வாழ்வை எப்படி எதிர்கொள்வது? கூட்டு தியானம் போல கூட்டு தற்கொலை சாத்தியமா?, அல்லது அன்றாடம் செத்துச் செத்து பிழைக்கலாமா?” ஊரும் சதமல