Skip to main content

Posts

Showing posts from October, 2012

எனக்கினி ஒரு ஜன்மும் கூடி...

                                                                                                                              -  சாம்ராஜ் - எனக்குத் திலகனை "பெருந்தச்சனாகத்" தான் அறிமுகம். 89 அல்லது 90 என்று நினைக்கிறேன். அந்த உருவமும் குரலும் மிகையில்லாத நடிப்பும் என்னவோ செய்தது. "கிரீடம்" தான் என்னைத் திலகனின் தீவிர ரசிகனாக மாற்றியது. (தமிழில் அஜித்தை வைத்து அக்கிரமம் செய்தார்களே அந்தப் படம் தான். அசலுக்கும் போலிக்கும் என்ன வித்தியாசம் என்று இன்று வரை உங்களுக்கு வாழ்வில் விளங்கவில்லை எனில் இது இரண்டையும் அடுத்தடுத்து பார்த்து விடுங்கள்.)மலையாள சினிமாவில் மிக முக்கியமான படங்களில் ஒன்றாகக் கொண்டாடப்படுகிற படங்களில் ஒன்று கிரீடம். ஒரு அச்சன் - மகனைப் பற்றியான கதை. வண்ணதாசனின் வரியில் சொன்னால் ஒரு அச்சனின் கதை அது.  ஒரு தந்தையாக, சாதாரண போலீஸ்காரனாக, மகனை எஸ்ஐ - யாக      பார்க்க வேண்டும் என்ற விடாப்பிடியான கனவு கொண்டவனாக அந்த    கனவுகள் நொறுங்கிப் போனவனாக அபாரமாக செய்திருப்பார். எங்கேனும் ஒரு வயதான, உண்மையான, கீழ்ப்படிதலான போலீஸ்காரரை காணும் பொழுது தி

துயரத்தின் கழுத்துச் சதை மார்பில் துவள்கிறது

   காலையில் எழுந்ததும் டீ குடிக்கப் போவேன்    பாதி டீ வரை சும்மாதான் குடிப்பேன்    பிறகு  "மயிரப்புடுங்கியுடு"  என்று    இரண்டு வறுக்கிகளை வாங்கி நனைத்துத் தின்பேன்.    ஒரு ஜிலேபியை தின்னும்    அந்த இரண்டு நிமிடங்களில்     இந்த வாழ்வு இனித்துச் சொட்டுகிறது    இனித்துச் சொட்டும் வாழ்வை     விட்டுவிடக்  கூடாதென்பதற்காகத்தான்    காலையிலும், மதியத்திலும், இரவிலும்    இடையிடையும்    ஜிலேபிகளைத் தின்கிறேன்.    பால்யத்தை மீட்டுரு செய்யவே    கம்பர்கட்டுகளையும், கொடல் வத்தல் பாக்கெட்டுகளையும்   தின்கிறேன்.   ப்ரூ காஃபியும், பூண்டு மிக்சர் தட்டோடும்   நான் மொட்டைமாடியில் அமர்ந்திருக்கையில்  மந்தமாருதம் என்னை  விட்டெங்கோடிப்போகும்?  நான் ஒழுங்காக கோப்புகளை பார்க்கவே ஆசைப்படுகிறேன்  இந்த கேண்டீன் முதலாளி மணிக்கொருதரம் காற்றில் சமோசாவை ஏவி விடுகிறான் அது என் காதோரம் வந்து பார்த்து பார்த்து என்னைத்தை கிழித்தாய் என்று கேட்கிறது இந்த நாட்டில் எவ்வளவோ சட்டங்கள் இருக்கின்றன ”இருசக்கர வாகனங்களில் காதலர்கள் இறுக்கி அணைத்தபடியே  பயணிக்கலாகாது