Skip to main content

Posts

Showing posts from September, 2013

பைத்தியத்தின் டீ

ஒரு பைத்தியம் கேரிபேக்கில் டீ வாங்கிக் கொண்டு போவதைப் பார்த்தேன் பைத்தியத்திற்கு இன்னமும் டீ குடிக்க வேண்டியிருக்கிறது. இந்த இருபத்திநான்காம்தேதி இரவை நான் பைத்தியத்தின் டீ என்பேன். தெய்வமே ! இந்த டீ சூடாறாதிருக்கட்டும்.. சுவை குன்றாதிருக்கட்டும்.. பருகப்பருக பல்கிப்பெருகட்டும்..

ஏன் எழுதுகிறேன்

                          நன்றி : அந்திமழை –செப்டம்பர்- 2013             எழுதுவதற்கு என்று என்றென்றைக்குமான அடிப்படைக் காரணம் ஒன்றுண்டு . அது ஒருவனுக்கு இந்த உலகத்திற்கு சொல்ல ஒரு சேதி இருக்கிறது என்பது தான் . ஒரு சாமானியனுக்கு எந்த சேதியும் இல்லையா என்றால் , அவனுக்கும் சொல்ல ஒன்று உண்டு தான் ஆனால் அவனுக்கு சொல்லியே தீரவேண்டிய நெருக்கடியோ , பதைபதைப்போ இல்லை . நீட்டிப்படுத்தால் தூக்கம் வந்து விடுகிறது என்றால் எழுதுவதற்கு ஒரு அவசியமும் கிடையாது . மாறாக படுக்கையில் நாலாய் எட்டாய் சுருண்டு வளையும் பாம்பு எழுதியே தீரவேண்டி இருக்கிறது .    எது ஒருவனை படுத்தி எடுக்கிறது என்பது ஆளுக்கு தக்க மாறுபடும் அது ஒன்றாகவே இருக்க ஒரு கட்டாயமும் இல்லை .   லா . ச . ரா , தன்னை ஒரு செளந்தர்ய உபாசகன் என்கிறார் . இளவேனிலோ , “ சகோதரிகளே , உங்கள் ஸ்நான அறையை நன்றாகத் தாளிட்டுக் கொள்ளுங்கள் . வெளியே ஒரு செளந்தர்ய உபாசகன் காத்திருக்கிறான் “ என்று சொல்கிறார் . சொல்லத்தான் செய்வார் ….   தவிர எழுத்துக்காரனுக்கு இய