Skip to main content

Posts

Showing posts from November, 2013

தற்கொலைக் கவிதைகள் 'க்ளிஷே' ஆகி விட்டன.

     அ.         காற்று வாங்கியபடி    தண்டவாளத்தின் ஓரமாய் நடந்து கொண்டிருந்தவனை   ஒரு குறுஞ்செய்தி வந்தடைந்தது. பிறகு தண்டவாளத்தில் இறங்கி நடந்தான்   ஆ என்னைக் கடந்து போன பூனை தெருமூலையில் சுருண்டு விழுந்து செத்தது. வெட்கம் என் நெஞ்சைப் பிடுங்கித் தின்கிறது   இ.  கண்ணீர் அஞ்சிலிப் போஸ்டைரை   பார்க்க பார்க்க  ஆசையாக இருக்கிறது   ஈ.      மொட்டை வெயிலில்   ரோட்ரோமாய் சரிந்து கிடக்கிறான் ஒரு குடிகாரன்.     என்   “   IN”   செய்த சட்டையை    யாரேனும் எடுத்து விடுங்கள்..    நானும் தூங்க வேண்டும். உ.  அந்தக் குவார்ட்டரில் கொஞ்சம் பூச்சிக்கொல்லியை கலக்க துப்பில்லை.   அதனால் வெறும் குவார்டராக குடிக்கிறேன்.   ஊ.    தற்கொலைக் கவிதைகள்  'க்ளிஷே'  ஆகி விட்டன. தற்கொலையைப் பார்.   எவ்வளவு புத்தம் புதிதாய் ஜொலிக்கிறது!

விகடன் மேடையில்- திரு. பிரபஞ்சன்