Skip to main content

Posts

Showing posts from July, 2014

திருடன் மணியன்பிள்ளையும் திருடர் சத்தியமூர்த்தியும்

                                                                                                                                                                                             இந்தப் புத்தகத்தைப் படிக்கவும் , இது குறித்து எழுதவும் அடிப்படை தகுதியொன்று அவசியம் என்று நினைக்கிறேன். அது தானும் ஒரு வகையில் திருடன்தான் என்கிற புரிந்துணர்வே. சமூக கட்டுப்பாட்டை குலைக்கும் திருட்டு என்கிற குற்றம் தண்டனைக்குரியதாகிறது. இது போலவே சமூகம் உருவாக்கி வைத்திருக்கிற ஒழுங்குகளை குலைக்கிற பலவும் தண்டனைக்குரிய குற்றங்களே என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். திருடர்கள் “ க்ளவுஸ் “ அணிந்து கொள்ளும் போதும் எங்கேனும் ஓரிடத்தில் தன் கைரேகையை தவற விட்டுவிடுகிறார்கள்.ஆனால் வெடிகுண்டை சத்தமில்லாமல் வெடிக்க வைப்பதில் சமத்தர்களான நாம் வெகு நிதானமாக, வெகு நுட்பமாக , தேர்ந்த கைகளால் குற்றங்களைச் செய்கிறோம். தனிமையில் நம் சிந்தை அடிக்கிற கூத்துக்களை நாமே அறிவோம் என்கிற படியால் நாம் மணியன்பிள்ளைக்கு சற்றும் சளைத்தவர்களில்லை.      இந்தப்புத்தகமெங்கும் விரவிக்கிடக்கும்   துர்சாகசங்களும

மொசைக்கல்லின் கருணை

மனைவியுடன் சண்டையிட்டுவிட்டு நாகர்கோவில் பாசஞ்சரின் கடைசி பெட்டியில் தொற்றி ஏறினேன். பேண்ட் ஜிப் திறந்திருப்பது வெகுநேரம் கழித்து தான் கவனத்திற்கு வந்தது. இந்த ரயிலின் “தடதட” எனக்குப் பிடித்திருக்கிறது. ஏனெனில், அமைதியான இடங்களில் என் மனதின் “ தளபுள “ வெளியே கேட்டு விடுகிறது. ஸ்டேஷன் வந்ததும் இறங்கி ப்ளாட்பாரத்தில் போடப்பட்டிருந்த மொசைக்கல்லில் அமர்ந்தேன். கருணை போல அது குளிர்ந்திருந்தது. சட்டென என் சிதோஷ்ண நிலை மாறிவிட்டது. இறைவனின் கருணை இல்லாதவர்களால் மொசைக்கல்லின் கருணையை அவ்வளவு எளிதாக நிராகரித்து விட முடியாது. அப்படியே அதில் சுருண்டு படுத்தேன் தலைமாட்டில் அரசமரம் விட்டுவிட்டு கூவிக்கொண்டிருந்தது. செல்ஃபோனை தேடிஎடுத்து அலுவலகத்திற்கு விடுப்பு சொன்னேன்.

வடிவேலு – பேச்சு வழக்கை மாற்றி அமைத்த கலைஞன்- பாலசுப்பிரமணியன் பொன்ராஜ்

http://malaigal.com/?p=5196                                                                         NANDRI : MALAIGAL .COM