Skip to main content

Posts

Showing posts from October, 2014

இப்படி மழை வந்து விசுறுகிறது

பைத்தியத்திற்கு ஒரு வீடிருந்தது துரத்தி விட்டார்கள். சாத்தப்பட்ட கடைகளின் வாசற்படிகள் இருந்தன. விரட்டிவிட்டார்கள். பைத்தியத்திற்கு ஒரு புளியமரத்தின் கருணை இருந்தது. அதை வெட்டிவிட்டார்கள். அதற்கு ஒரு இடிந்த பள்ளிக்கூடத்தின் இடியாத பகுதியிருந்தது.  அதை முற்றாக இடித்து விட்டார்கள். பைத்தியத்திற்கு ஒரு  பிள்ளையார் கோவில் மேடை இருந்தது. அவர்க்கு சதுர்த்தி வந்தது. பைத்தியத்திற்கு வெட்டவெளி இருந்தது. இப்படி மழை வந்து விசுறுகிறது. பெட்டிக்கடைகாரர்களிடம் கம்பும் டீக்கடைக்காரர்களிடம் வெந்நீரும் இருக்கின்றன. ஆனாலும் என்ன, பைத்தியத்திற்கு அதன் பைத்தியமிருக்கிறது.

கலை என்பது ஒரு தனித்த ஞானம்

     (தோழர் தியாகுவின்  ” மார்க்சின் தூரிகை ”   நூலை முன்வைத்து ) நான் என்னை ஒரு  ” குருட்டு மார்க்ஸிய ஆதரவாளன் ”  என்று சொல்லிக்கொள்ளவே விரும்புவேன். அப்படிச் சொல்லிக்கொள்ளும் அளவுதான் எனக்கு மார்க்சியம் தெரியும். எனினும் ஒரு அயல்நாட்டு அறிஞரின் கூற்று தரும் தைரியத்தில் தான் இந்தப்புத்தகத்தைப் பற்றிப் பேச ஒப்புக்கொண்டேன். அந்தக்கூற்று..  “ நெஞ்சத்துஉண்மை எவ்வளவு முட்டாள்தனமாக தோன்றிடும் போதிலும் அது காணவேண்டியதும் அழகானதுமாகும் “ என்று சொல்கிறது. அந்த அறிஞரின் பெயரென்ன ? அவர் எந்த தேசத்தை சேர்ந்தவர் ? என்றெல்லாம் நீங்கள் என்னைக் குடையக்கூடாது. ஒரு வேளை அவர் இந்தக் கட்டுரையில், இந்தக் கூற்றிற்காகவே பிறந்தவராக கூட இருக்கலாம்.      மார்க்ஸியர்கள் பற்றி ஒரு அவச்சித்திரம் உண்டு. அவர்கள் பல்லிடுக்குகளில் எப்போதும் ஜெலாட்டின்குச்சிகளை ஒளித்துவைத்திருப்பார்கள். அவர்களுக்கு ஒழுங்காக மழையில் நனையத்தெரியாது. அவர்கள் வீட்டில் நிலாமுற்றம் இருப்பதில்லை. அவர்களின் காதலிகள் அடிக்கடி தலையில் அடித்துக்கொள்வார்கள். இலை, சருகு, பூ, காய் , மரம் ,அணில்குஞ்சு, வண்ணத்துப்பூச்சி, ப்யானோ,

தங்கவேல், முத்துவேல், ஞானவேல், வடிவேல் …

தங்கவேலுவின் காதல் முத்துவேலை அழைத்து கோபமாக கத்தியது . “ இந்த உலகத்தில் நீதி செத்துவிட்டது ” என்று சொன்னது . முத்துலேல் தன் வாழ்வில் அநேகந் தடவைகள் அந்த வசனத்தை கேட்டிருந்தார் . “ ஆமாம் …. ஆனால் இது ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டது ” என்றார் . “ அவளொரு நயவஞ்சகி ” என்றது . நயவஞ்சகம் என்கிற சொல்லில் கூட கொஞ்சம்   புளித்த வாடையடித்ததால் அவர் பேச்சை திசைதிருப்ப முயன்றார் . “  தமிழ்மூவர் “ கேட்டீர்களா ? “ என்று கேட்டு வைத்தார் . தொலைபேசியின் மறுமுனையில் இருப்பது காத ல் அதுவும் ஆக்ரோச கதியில் . பாவம் , அதையவர் அறிந்திருக்கவில்லை . ” தமிழ் ஒரு புடலங்காய் …   அந்த மூவரும் சுரைக்காய்கள் “ என்று பதில்வரவே , முத்துவேல் அமைதியானார் . பின் தன் பழைய நினைவுகளின் பாழண்டிய பக்கங்களை புரட்டத் துவங்கியது அது . அதில் நிலவுப்பயன் துய்த்த காட்சிகளும் , கைநரம்பு அறுந்து இரத்தம் பீறிட்ட காட்சிகளும் வந்தன . பழைய நினைவுகளின் புத்தகத்தை கையில் எடுத்ததுமே அதன் கோபமும் ரோஷமும் பறந்து விட்டது . “ க ….