Skip to main content

Posts

Showing posts from April, 2015

குறையொன்றுமில்லை

குறையொன்றுமில்லையை நேற்றுதான்  நன்றாக  கவனித்தேன் அதனுள்ளே ஒரு குட்டிக்குறை தெரிகிறது                           அல்லது பெரியகுறையொன்று  குட்டிக்குறையின் பாவனையில் ஒளிந்திருக்கிறது.   குறையொன்றுமில்லை குறையொன்றுமில்லை   என்றுதான்    சொல்கிறது பிறகேன் இப்படி தேம்புகிறது.

கவி – கவிதை – கலகம் - கலப்படம்: சில அடிப்படை குழப்பங்கள்

              இது என்னுடைய கட்டுரை . எனவே இவை என்னுடைய சந்தேகங்களும் , குழப்பங்களுமாகும் . இதே குழப்பமும் சந்தேகமும் கொண்ட ஒரு வாசகன் இயல்பாக இக்கட்டுரையுடன் இணைந்து கொள்கிறான் . நம் கிறுக்கு தெளிய மேற்கொள்ளப்படும் இச்செயலின் முடிவில் நம் தலை மேலும் வீங்கிவிடவும் வாய்ப்புண்டு . ஏனெனில், இப்பயணத்தின் “ வழிகாட்டும் பலகைகள் “ அவ்வளவு நேர்மையானவையாக இல்லை . இதன் திசைகள் எப்போதும் சுழற்சியில் இருக்கின்றன . இப்போது நாம் கிழக்கு திசை நோக்கி பயணிக்க வேண்டும் . எனவே ” மேற்கு ” என்று குறிக்கப்பட்டிருக்கிற பாதையின் வழியே தந்திரமாக நமது பயணத்தை துவங்கலாம் .            கலை தன் ” சோதிப்ரகாசத்தை ” நமக்கு காட்டி மறைக்கிறது . மானுட வாழ்வின் பொற்கணம் ஒன்றை ஏந்தி நம் உயிர் தளும்பி வழிகிறது . கடவுளைக் காண கடுந்தவம் புரியும் ஒருவன் கண்ட மாத்திரத்தில் கண்களை மூடிக்கொள்கிறான் . அப்படி கண்களை மூடிக்கொள்ள செய்வதன் பெயரே கடவுள் . நாம் அதைப் பார்க்க முடியாது . அதனூடே பேச முடியாது . மாறாக , அதன் சோதியும் , ப்ரகாசமும் எங்கி