Skip to main content

Posts

Showing posts from February, 2018

மனையாட்டி

                                  மனையாட்டி ஊருக்கு போயிருந்த நாளில் தன்னிச்சையாக மொட்டை மாடிக்குப் போனான் கருநீல வானத்தில் கரைந்து நின்றான் குறைமதிக்கும் நெஞ்சழிந்தான் நட்சத்திரங்களில் மினுமினுத்தான் அவள் வீட்டில் இருக்கையில் இவ்வளவு பெரிய வானம் இத்தனை கோடி விண்மீன்கள் இப்படி  ஜொலிக்கும் நிலவு இவையெல்லாம்  எங்கே ஒளிந்து கொள்கின்றன  என்று   ஒரே ஒரு கணம் யோசித்தான். மறுகணம் அஞ்சி நடுங்கி " miss u" என்றொரு குறுஞ்செய்தி அனுப்பினான்.

மல்யுத்தம்

                       வழக்கம் போல் கதவை எட்டி உதைத்தேன். முரண்டு பிடித்தது மறுபடியும் உதைத்தேன் மறுபடியும் முரண்டது மூன்றாவது உதைக்கு என் காலைப் பற்றி தூரத்தில் எறிந்தது எழந்து வந்து மீண்டும் முயல்கையில் அது ஆடாது நிற்க நான் குப்புற விழுந்தேன். கபாலத்தால் வெறிகொண்டு  முட்ட கிறுகிறுவென்றது  உலகம் உன்னையும் விட்டு விட்டால் உதைக்க   ஓர் ஆளில்லை மல்யுத்தனின் புடைத்தெழுந்த தேகத்துடன் நான் ஓடோடி வருவதைப் பார் என்னையே தூக்கி உன் மேல் எறிந்து பொடிப் பொடியாக்குவேன் காண்.

ரோஜா

            நீ ரோஜாக்களோடு ரோஜாவாய் அமர்ந்திருப்பது போல் ஒரு " DP" யைக் கண்டேன்  விசாரித்த போது, " அது ஒரு பழைய போட்டோ... "என்றாய் தெரியும் அன்பே... ரோஜாக்கள் எப்போதும் கடந்த காலத்தில்தான் பூக்கின்றன.

தேனொடு மீன் – குகன்சரிதம்

இராமனாகிய தேனும், குகனாகிய மீனும் ஒருவரையொருவர் கண்டு , களிப்பெய்தி, கண்ணீர் பெருக்கி, ஒருவருள் ஒருவர் புக்கு, பிரிந்தும் பிரியா நின்றதைப் பேச விழைகிறது இக்கட்டுரை. இராமயணத்தை வாசிக்க இராம பக்தி அவசியமில்லை.பொதுவுடமைச் சித்தாதங்களில் இறுதி வரை உறுதிப் பிடிப்போடு இருந்த தோழர் ஜீவா கம்பனை விடவில்லை. இராமயணத்தின் வற்றாத இலக்கிய வளங்களை அவர் புறக்கணிக்கவில்லை. உடல் முழுக்க திருநீறு பூசி, கைகளில் சப்ளாக் கட்டைகளைக் கொடுத்து, அவர் இராமபஜனை செய்வதாக தி.மு.கழகத்தார் கேலிச்சித்திரம் தீட்டிய போதும் அவர் பின்வாங்கவில்லை. நாமும் பின்வாங்க வேண்டியடிதில்லை.“அறிஞர் காதற்கு அமை விருந்துதான்“ அவன். இராமன் பெயரால் நிகழும் குருதிப் பெருக்கிற்கும் அவனுக்கும் தொடர்பில்லை.அவன் கைகளில் இருப்பது அநீதிகளுக்கெதிரான கோதண்டமே என்றும், அது பர சமயத்து கர்ப்பிணி பெண்களின் வயிற்றில் இறங்கும் பிச்சுவா அல்ல என்றும் நம்புவது, தேவையற்ற மனத்தடைகளிலிருந்து நம்மை விலக்கி வைக்கும். தவிரவும் இராமகாதை வெறுமனே இராமகாதை மட்டுமல்ல.இந்தக் கட்டுரையின் நாயகனும் குகன்தான். இராமன் குகனை பெருமை செய்யும் ஒரு துணை மட்டுமே. கம்பனில

மாயா விநோதம்

                        நிசப்தம் நிலவிய கணமொன்றில் கொஞ்சம் சத்தமாகச் சொல்லிவிட்டேன் " துரதிருஷ்டசாலிகள் பொதுவாக ஜூன் மாதத்தில்தான்   பிறக்கிறார்கள்"  பக்கத்து டேபிளில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்  ஒரு கணம் அதிர்ந்துவிட்டு பிறகு சொன்னார்...  " தவறு...ஏப்ரல் மாதத்தில்தான் பிறக்கிறார்கள்.."  பெரிய நெற்றியை திருநீற்றால் நிறைத்திருந்த ஒரு பெரியவர்  தூரத்திலிருந்து சத்தமிட்டுச் சொன்னார்.. " உறுதியாக , அது நவம்பர்தான்..."  அப்போது அவர் கண்களில் பளிங்கு மின்னியது   மோர் ஊற்ற வந்த சிப்பந்திச் சிறுவன் " சார்..அது ஆகஸ்ட்.." என்று முணுமுணுத்தான்.   கைகழுவி விட்டு என்னைக் கடந்து சென்ற இளநங்கையொருத்தி " wrong, it's  march only "  என்று கிசுகிசுத்துவிட்டுப் போனாள் எல்லா திசைகளிலிருந்தும் எதிர்க்குரல்கள் எழுந்தன பில்லை வாங்கி கம்பியில் செருகி விட்டு மிச்ச சில்லறைகளின் மீது அடித்துச் சொன்னார் முதலாளி.. " எல்லோரும் தவறாகச் சொல்கிறார்கள்...துரதிர்ஷடசாலி கள் எப்போதும் மே மாதத்தில்தான் பிறந்து தொலைக்

கொடுங்குழை

                   என் இரவிலும் பகலிலும் பட்டு      ராட்சத மணி நா போல் அதிர்கிறது      உன் குழையூசல்          

தோழர் !

          கடவுள் எனக்குச் செய்யும் ஒரே ஒரு உருப்படியான காரியம் அதிகாலையிலேயே என்னை எழுப்பி விட்டு விடுவதுதான் இளமிருளில் கொஞ்சமாய்த் திரியும் மனிதர்கள் ஒருவரோடொருவர் பரிவோடிருக்கிறார்கள் ஒருவரையொருவர் அன்பு செய்ய முயல்கிறார்கள் என்னைத் தூரத்தில் கண்டதுமே சர்க்கரை குறைவான, ஆற்றாத தேநீர் ஒன்றை தயாரிக்கத் துவங்கி விடுகிறார் கூன் விழுந்த அந்த டீ மாஸ்டர் நான் வரும் முன்பே என் வழக்கமான டேபிளில் டீ வந்து அமர்ந்திருக்கும். அதை ஒரு பூச்செண்டு என்று உணர்ந்த கொண்ட நாளில் அவருக்கே கேட்காதபடி கண்ணீரை மறைத்துக் கொண்டு அவரைத் " தோழர்! " என்றழைத்தேன்.