Skip to main content

Posts

Showing posts from December, 2018

நடனம்

                      சமையற் கூடத்தில் என் மனைவியின் சிறு நடனச் சுந்தரத்தை நான் கண்டுவிட்டேன். பிறகும் அவள் அந்த வெண்டைக்காய் பொரியலை சுவைத்துப் பார்க்கச் சொல்வது ஒரு வித கூறியது கூறல்தான்.

நாசமாய்ப்போன மலர்

                                                                                                                காஹா சத்தசஈ மகாராஷ்டரி பிராகிருத மொழியில் எழுதப்பட்ட 700 காதல் பாடல்களைக் கொண்ட நூல். இது கி.பி. 200 க்கும் 450 க்கும் இடையில் ஆந்திரா- மகாராஷ்டிரப் பகுதியில் இருந்து தோன்றியிருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. இதை எழுதியது ஹால என்கிற ஆந்திர தேசத்து அரசனென்று ஒரு கருத்தும், இது ஒரு தொகை நூலே என்று இன்னொரு கருத்தும் நிலவுகிறது. இந்நூலுக்கு எழுதப்பட்டிருக்கிற பழைய சமஸ்கிருத உரைகளிலிருந்து இத்தொகை நூலில் இடம் பெற்றிருக்கும் கவிஞர்களில் அறுவர் அல்லது எழுவர் பெண்பாற் புலவர்கள் என்பதையும் அறிய முடிகிறது.        காஹா சத்தசஈ யில் இருந்து 251 பாடல்களை ஆங்கிலம் வழி தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார்கள் சுந்தர்காளி, பரிமளம்சுந்தர் இருவரும். இதில் நமது சங்க அகப்பாடல்களின் எதிரொலிகளைக் காணமுடிகிறது. மொழிபெயர்ப்பாளர் சில ஒப்புமைகளைக் குறிப்பிடுகிறார். அதுவன்றியும் நிறையவே தென்படுகின்றன. அவற்றைக் காண நேர்கையில் நமது பழந்தமிழ் கவிவளம் குறித்த மிதப்பு தோன்றுகிறது. பாட்டனார்

நெஞ்சகம்

                   நிம்மதி என்பது ஒரு வித சுவாரஸ்ய குறைவு திட்டங்கள் கொப்பளிக்காத இலேசான இதயத்தில் வெறுமையின் காற்றோட்டம் சும்மா இருக்கும் சுகத்தில் உப்போ உறைப்போ ஒன்றுமில்லை. அமைதி என்பது அலுப்பூட்டும் தருவாயோ? குஷன் சீட்டில் சாய்ந்து கொண்டு கால்களை அகட்டி அண்ணாந்திருக்கும் கோலத்தின் ஏகாந்தம் சீக்கிரமே  சலிித்து விிடுகிறது பிறகு தன் வாலில் தானே பட்டாசைக் கொளுத்திக் கொண்டு சுற்றி சுற்றி ஓடத் துவங்குகிறான்.