Skip to main content

Posts

Showing posts from May, 2019

லீவூ

                                  இந்த அதிகாலையில் ஓர் ஓட்டு வீட்டின் கூரை மீது  எழுந்தருளியுள்ளது  ஒரு மயில்  எந்தத் தருணத்தும் இடிந்து விழும் கதியிலுள்ள அவ்வீடு சட்டென ஒரு கலைக்கூடமாகிவிட்டது பவிக்குட்டி எம்பிஎம்பி குதிக்கிறாள் என்னென்னவோ பேசுகிறாள் அதனோடு மயில் தோகை விரித்து ஒரு குலுக்கு குலுக்குகையில் " இன்னைக்கு ஸ்கூலுக்கு லீவே...." என்று  கூவினாள். நடனமும் பாட்டும் போன்றிருந்ததக்கணம். நொண்டியாட அழைக்கிறாள் அதை. " எனக்குத் தெரியாதே..? " என்றது வருந்திச் சொல்வது கேட்கிறது எனக்கு. மயில் ஒன்றும் சும்மா வரவில்லை. பவியின் அப்பன் வீட்டை விட்டு ஓடும் போது கூடவே ஓடிப்போன அவளது சிரிப்பை திரும்பக் கொத்தி வந்துள்ளது.

அகத்தகத்தகத்துள்ளே...

நண்பா.... உனக்குத் தெரியுமா? நேற்றைய விருந்தில் உன் கோப்பையுள் கொஞ்சம் நஞ்சைக் கொட்ட இந்தக் கைகள் எப்படி துடியாய்த் துடித்ததென்று. வீட்டிற்கு வந்ததும் ஒவ்வொரு விரலாய் கொறித்துத் தின்றேன்.