Skip to main content

Posts

Showing posts from September, 2022

சுவரொட்டி

  46 வயதில் ஒல்லியான உடல்வாகில் கத்தரிப்பூ கலர் சேலையில் ஒருவர் காணாமல் போய்விட்டார் சற்றே மனநிலை பிசகியவர் என்கிறது சுவரொட்டி. சற்றே மனநிலையை பிசகச் செய்யப் போராடும் ஒரு குடிகாரன் அதை ஒட்டிவிட்டு நகர்கிறான். சற்றே மனநிலை பிசகிய காணாமல் போக முடியாத நான் சன்மானத்தொகையை வாசித்துக் கொண்டிருக்கிறேன். சற்றும் மனநிலை பிசகாத ஆனால் சற்றே மனநிலை பிசகிய ஒருவரை காணாது கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் ஒருவரின் தொடர்பு எண் கீழே தரப்பட்டுள்ளது.

கல்யாணத் தேன்நிலா!

  இ ளையராஜா கேட்காமல் ஜேசுதாசோ, சித்ராவோ கேட்காமல் கச்சேரித் திரளில் யாரும் கேட்காமல் என் ஒன்பது காதலிகளில் ஒருத்தியும் கேட்காமல் கேலி செய்யும் நண்பர் கூட்டத்தில் ஒருவரும் கேட்காமல் என்னை விரட்டிவிட்ட குருநாதர் கேட்காத போது தாலாட்டாக்க முயன்று முயன்று தோற்ற  என் குழந்தையும் கேட்காத போது நிலவும், நட்சத்திரங்களும் கூட இல்லாத நடு நிசியில் மொட்டைமாடியில் நின்று கொண்டு கரங்களிரண்டையும் அகல விரித்தபடியே அந்த கமகத்தில் நான் சரியாக மின்னிவிட்டேன்.

பழமுதிர்சோலையார்

அன்று முழுக்க கடும் மனச்சோர்வில் இருந்தேன். கட்டிலை விட்டு எழக்கூட விரும்பாத  மனச்சோர்வு. வாழ்வு அப்படி அடித்து மூலையில் கிடத்துவது அவ்வப்பொழுது நடப்பதுதான். அடுத்த நாள் அதையும் இதையும் பற்றி கொண்டு மெல்ல எழுந்து நின்றேன். கட்டாயம் போயாக வேண்டிய உறவினரின் சுபகாரியம் ஒன்று இருந்தது. முதல் நாளுக்கும் அடுத்த நாளிற்கும் வாழ்வில் எதுவுமே மாறியிருக்கவில்லை  ஆனால் திடீரென எங்கிருந்தோ ஒரு பாட்டு வந்து நாவில் அமர்ந்தது. ... "தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி சிந்தை இனித்திட உறவுகள் மேவி பிள்ளைகள் பேணி வளர்ந்தது இங்கே மண்னில் இதைவிட சொர்க்கம் எங்கே நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை என்றும் வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை. நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை என்றும் வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை. இலக்கியம் போல் எங்கள் குடும்பமும் விளங்க இடைவிடாது மனமொரு  மகிழ்ச்சியில் திளைத்திட.."  அந்த அழுகிய நான் எங்கு ஓடி ஒளிந்ததோ   தெரியவில்லை.  பாட்டில் ஏறிப்  பறந்து கொண்டிருந்தேன்.  திடீரென ஒரு மொட்டை உருவம் என் தோள் தொட்டுத் திருப்பி  " நேற்று நீ எப்படி இருந்தாய்... நினைவிருக்கிறதா..?"  என்று