"நீ போய்ச் சாப்பிடு, எனக்கு மனசு சரியில்லை..." என்றாள் டிபன் பாக்ஸை கழற்றி வைத்து நிமிர்ந்தால் எதிர் இருக்கையில் அமர்ந்திருக்கிறாள் இவ்வளவு அட்டகாசமான மனதை வைத்துக் கொண்டு அதை ஏனடி சரியில்லாமல் வைத்திருந்தாய்?
கொ ஞ்சம் குண்டுப்பெண் ஆனாலும் எம்பி எம்பிக் குதித்துக் கொண்டிருந்தாள் ஒரு முறை மலரைத் தொட முடிந்தது அப்போதும் பறித்து வரக் கூடவில்லை. அவள் விடாது எம்பிக் கொண்டிருந்ததில் அந்த நிகழ்ச்சிக்கு ஆங்காங்கே பார்வையாளர்கள் தோன்றி விட்டார்கள். அவளா? மலரா? என்பதில் அவர்கள் ஆவல் கூர்ந்து விட்டனர் ஒரு தருணம் வந்தது முழங்காலில் கையூன்றி அவள் மூச்சிரைக்கும் தருணம் நிமிர்ந்து நின்றவள் மலரை அண்ணாந்து ஒரு சிரிசிரித்தாள். பிறகு தன் வழியே நடக்கத் துவங்கிவிட்டாள். தோல்வி என்று சொல்லி விட முடியாத சிரிப்பே! இப்படித்தான் இத்தனை பேரையும் ஏமாற்றுவாயா?