Skip to main content

Posts

Showing posts from October, 2019

கேட்ராக்ட்

அவருக்கு கைகள் திடமாகத்தான் உள்ளன. கண்தான் கொஞ்சம் மங்கி விட்டது ஒழுங்காக உட்கார்ந்து நன்றாக கண்களைத் திறந்து இரண்டு சொட்டு மருந்தை கண்ணுக்குள் விடுவதில் ஏதோ ஒரு கணிதப் பிசகு... இரண்டாவது முறை தவறிய போது அவருள்ளே கண்ணாடி உடைசல் விழிகளில் ஒரு சொட்டு நீர் ஒரு சொட்டு போதும் கழிவிரக்கத்திற்கு அது  ரத்தவாடை குதறிக் கிழிக்கும் மூர்க்கத்தோடு அடுத்த கணமே அது அவர் உள்ளத்துள் பாய்கிறது. அவருக்கு கண் மட்டுந்தான் கொஞ்சம் மங்கிவிட்டது. அதை வென்றடக்கி ஆகாயத்திற்கப்புறம் வீசி எறிந்தவர் அண்ணாந்த கோலத்தில் அமர்ந்து நெற்றிக்கண்ணென கண்களைத் திறந்து நான்கு சொட்டுகளை நடுவிழிக்குள் விடுகிறார். ஒவ்வொரு சொட்டும் பேட்மிண்டன் பயிற்சியின் முடிவில் வழக்கமாக அவர் அடிக்கும் அதே ஆக்ரோஷமான  ஷாட்கள்.

நீலம்பாரித்தல்

   ஓர் அதிகாலையில் ரயிலைப் பிடிக்கும் அவசரத்தில்  பாத்ரூமிலிருந்து பாய்ந்து வந்து சாப்பாட்டுத்தட்டின் முன் அமர்ந்தேன். ஒரு காலத்தில் “ சத்துணவு” என்று எங்கள் நண்பர் குழாமால் கேலி செய்யப்பட்ட அதே சம்பாரவை. இன்றோ என் தினசரி காலை உணவு. “சத்துணவு” என்கிற விளி எப்படிக் கேலியானது என்பது இன்று வரை விளங்கவில்லை. அவசர அவசரமாக அள்ளி வாயில் திணிக்கையில்தான் கவனித்தேன் என் கையை. அது கருநீலத்தில் இருந்தது உடனே இடது கைக்கு ஓடினேன். அதுவும் அப்படியே இருந்தது. எதையோ தொட்டுவிட்டு ஒழுங்காக கழுவாமல் அமர்ந்து விட்டேன் போல ? திரும்பவும் எழுந்து கைகளை அழுத்திக் கழுவி விட்டு வந்தமர்ந்தேன். ரயில்வேறு தூரத்தில் கூவிக்கொண்டிருந்தது.   இரண்டு வாயிற்குப் பிறகு திரும்பவும் கைகளைப் பார்த்தேன். எதுவும் மாறவில்லை. கருப்பு குறைந்து நீலம் கூடிவிட்டது போல் தோன்றியது. கட்டைவிரல் மேட்டில் கொஞ்சம் வெளிரிய இளமஞ்சளும் பூத்திருந்தது. எனக்கு எல்லாம் விளங்கி விட்டது.    சமீப நாட்களில் உணவுக் கட்டுப்பாட்டில் இருக்கிறேன். என்னளவில் கொஞ்சம் கடுமையானதுதான். பத்து கிலோ குறைத்தத்தில் நெஞ்செலும்பு வெளித்தள்ளி விட்டது. ஆனால் இந்தக

அரிய சந்திப்பு

முனகலுக்கும் எரிச்சலுக்கும் இடையே உறுமலுக்கும் சங்கிலிச் சத்தத்திற்குமிடையே இன்று ஒரு முழு நிமிடம் சிக்னலுக்கு முன் கைகட்டி நின்றேன். "இப்படி ஒவ்வொரு நாளும் ஒரு முழுநிமிடம்  எதன் முன்னேனும் கைகட்டி நில்" என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.                  *** முனகலுக்கும் எரிச்சலுக்கும் இடையே உறுமலுக்கும் சங்கிலிச் சத்தத்திற்குமிடையே இன்று ஒரு முழு நிமிடம் சிக்னலுக்கு முன் கைகட்டி நின்றேன். இவ்வளவு காலத்தில் சிக்னலிடம் ஒரு வார்த்தை கூட பேசியதில்லை. " இங்கதான்..சந்தைக்கு..கீரை வாங்கப் போகிறேன்" என்றேன். " மிக்க மகிழ்ச்சி.. பத்திரமாக போய் வாருங்கள்.. " என்றது.