Skip to main content

Posts

Showing posts from March, 2019

புத்துலகு

            இன்று புதிய ஸ்டிக்கர் ஒன்றைக் கண்டேன் " Baby in car " நான் அந்தக் காரை விரட்டிச் சென்று முந்தவில்லை. சப்தம் செய்து பீதியூட்டவில்லை ஒரு தேர்போல் அது ஆடி அசைந்து செல்லட்டும் என்றெண்ணிக் கொண்டேன். " Baby on Road" என்று  ஒரு ஸ்டிக்கர் இல்லை.  எங்கும் ஒட்டப்படவுமில்லை.  மேலும்  அதில் எனக்குக் கடமையுமில்லை.

தங்காய் !

அந்நேரம் வரையிலும் அவளைத்தான் தின்று கொண்டிருந்தேன். அவள் வளைவுகளில் ஊர்ந்து கொண்டிருந்தேன். அவள் முலைகளை உண்டு கொண்டிருந்தேன் வெண் முதுகுப் படகில் மிதந்து கொண்டிருந்தேன் மருத்துவர் அறைக்குள் போய் திரும்பியவள் துப்பட்டாவால் கண்களை ஒத்திக் கொண்டு நிற்கிறாள் நெளிவும், சுளிவும் முலையும், படகும் சட்டென மறைந்து விட்டன. கண்ணீர்தான் எவ்வளவு பரிசுத்தம் !

இரு கவிதைகள்

                                                            எ ட்டிக்காய் பெற்ற பிள்ளை ஒரு சிறுமி ஆசி வேண்டி என் காலில் பணிகிறாள். ஐயோ...கடவுளே... இரண்டே இரண்டு நிமிடம் என்னை இனிக்கச் செய்தீரென்றால் ஒரு நல்ல சொல் எடுத்துக் கொள்வேன்.                                                               காலம் "காலம் ஒரு நாள் மாறும்" என்று சொன்னார்கள் அதையே உத்துப்பார்த்தபடி பல்லூழி காலமாக  குத்தவைத்து  உட்கார்ந்திருக்கிறான் ஒருவன்.