இன்று புதிய ஸ்டிக்கர் ஒன்றைக் கண்டேன்
" Baby in car "
நான் அந்தக் காரை விரட்டிச் சென்று முந்தவில்லை.
சப்தம் செய்து பீதியூட்டவில்லை
ஒரு தேர்போல்
அது ஆடி அசைந்து செல்லட்டும்
என்றெண்ணிக் கொண்டேன்.
" Baby on Road" என்று
ஒரு ஸ்டிக்கர் இல்லை.
எங்கும் ஒட்டப்படவுமில்லை.
மேலும்
அதில் எனக்குக் கடமையுமில்லை.
Comments