Skip to main content

Posts

Showing posts from May, 2020

ராட்சதக் கப்பல்

கு ன்றின் உச்சியில் கடலுக்கடியில் குகையிருளில் எனக்கென்று ஒரு இடம் எங்கேயும் இல்லை. நான் நகர்கையில்  கூடவே நகர்கிறது ஒரு ராட்சதக் கப்பல் அதற்குள் அவ்வளவு கிடக்கின்றன .

யாதும் ஊரே!

அ வர்கள் நடக்கிறார்கள் நடக்கிறார்கள் நடக்கிறார்கள் வீடு நோக்கியா நடக்கிறார்கள்? எங்கேனும் நடந்தாக வேண்டும் எனவே அவர்கள் நடக்கிறார்கள் நடக்கிறார்கள் நடக்கிறார்கள் யாரை ஓங்கி உதைப்பது என்றவர்க்குத் தெரியவில்லை எனவே அவர்கள் நடக்கிறார்கள் நடக்கிறார்கள் நடக்கிறார்கள் “பாளம் பாளமாக வெடித்துவிட்ட பாதங்கள்” இப்போது இது வெறும் உவமையல்ல அவர்கள் நடக்கிறார்கள் நடக்கிறார்கள் நடக்கிறார்கள் அவர்கள் பைகளை எடுத்துத் தோளில் மாட்டிய போது மிரண்டு போயின தெய்வங்கள் அவர்கள் நடக்கிறார்கள் நடக்கிறார்கள் நடக்கிறார்கள் மனித சாத்தியத்தை விரிவாக்கும் முயற்சியில் பறக்கக்கூடச் செய்வார்கள் அவர்கள் நடக்கிறார்கள் நடக்கிறார்கள் நடக்கிறார்கள் பிறந்தது எங்கோ? தின்றது எங்கோ? எரிவது எங்கானால் என்ன? அவர்கள் நடக்கிறார்கள் நடக்கிறார்கள் நடக்கிறார்கள் அகண்ட பா ரதம் ஒரு சந்துக்குள் ஓடியொளிய அவர்கள் நடக்கிறார்கள் நடக்கிறார்கள் நடக்கிறார்கள் அவர்கள் நடக்கிறார்கள் நடக்கிறார்கள் நடக்கிறார்கள் கணியனின் மீதேறி நடக்கிறார்கள். நன்றி: ஆனந்தவிகடன்