Skip to main content

Posts

Showing posts from January, 2023

அருளழகு

  தீ பச்சுடரை கைகளால் ஒற்றி அதன் உஷ்ணக் கொழுந்தை கண்களில்  படரவிடுகையில் நானெங்கும் நீ நிறைகிறாய்.

உணவுத் திருவிழா

  டி ராக்டர் உழத்துவங்குகிறது. நாரை ஒன்று தரையிறங்கியது புழு வேண்டி. இரண்டாகி நான்காகி பத்தாகி நாரைத் திரள் இப்போது. ராட்சத டயர்களை மறந்து முன்னும் பின்னும்   கொஞ்சுவது போல் கொத்திக் கொண்டு திரிகின்றன.  ஒரே ஒரு நாயகி அவளை மோகித்து அணையும் பெருங்காதல் கூட்டம் டிராக்டர் உழுதுவிளையாட நாரை உண்டு விளையாட துவங்கி விட்டது ஒரு சிவப்பு வெள்ளைத் திருவிழா

சொர்க்கம் என்கிற உவமைக்கு..

  சா க்லெட்டை நீட்டும் அந்நியர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். சின்ன சாக்லெட்டை கூட நீட்டாதவன் இந்த பூமிக்கு அந்நியன் அவனிடம் கவனமாக இருக்க வேண்டும். நைஸாகப் பேசுபவர்களிடம்  கவனமாக  இருக்க வேண்டும். உம்மனாம் மூஞ்சிகளிடம் கவனமாகத் தானே இருக்க வேண்டும். முத்தமிடுவோரிடம் கவனமாக இருக்க வேண்டும். முத்தமிட முடியாதோரிடம் கவனமாகவே இருக்க வேண்டும். தனியாக இருக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். கூட்ட நெரிசலில் கவனமாகத்தானே இருந்தாக வேண்டும். வெய்யிலிடம் கவனமாக இருக்க வேண்டும். மழையிடமும், பனியிடமும்  மிகவும் கவனமாக இருக்க வேண்டும் ஐஸ்கிரீமிடம் கவனமாக இருக்க வேண்டும். பல் சொத்தையில் கவனம் தேவை. விளையாடும் போது கவனமாக இருக்க வேண்டும். விளையாடாத பொழுதிலோ போனிடம்  கவனமாக இருக்க வேண்டும். ஸ்கர்ட்டிடமும் காற்றிடமும் கவனமாக இருக்க வேண்டும். அப்பாவின் நண்பர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். அப்பாவே என்றாலும் 'கவனம்' என்று எச்சரிக்கின்றன சில க்ரைம் ஸ்டோரிகள். தன் அம்மா அல்லாத  பிற அம்மாக்களிடம் கவனமாக இருக்க வேண்டும். 'உனக்குமட்டும்தான்' 'நீ மட்டும்தான்' என்கிற சொந்த அம்மாக்களிடம் கவன