Skip to main content

Posts

Showing posts from August, 2023

ஒரு கவிதையின் கதை

அது பெருந்தொற்றுக் காலம்.  அப்பன் சாவுக்கு மகன் போகாத காலம். அன்னைக்கும் பிள்ளைக்கும் இரண்டடி இடைவெளி இருந்த காலம். உடைகள் ஒன்றுடன் ஒன்று கலந்து விட்டதற்காக ஓருடல் ஈருயிர்கள்  சண்டை செய்து கொண்ட  காலம். கடவுள்கள் தங்கள் கதவுகளை இழுத்துச் சாத்திக் கொண்ட காலம்.  உலகம் வீட்டுக்குள் சுருங்கிக் கிடந்த காலத்தில் நான் வெளியேதான் சுற்றிக் கொண்டிருந்தேன். வழக்கத்தை விட அதிகமாகச்  சுற்ற வேண்டியிருந்தது. எனது பணி அரசு மருத்துவமனையில் மருந்தாளுநர். தினமும் நோயாளிகளை  தொட்டுச் சந்திக்க வேண்டிய பணி. புற  நோயாளிகளில் மறுநாள் கோவிட்  நோயாளியாக ஆகப் போகும் பலரும் இருப்பர்.  இரட்டை மாஸ்க் போட்டுக் கொள்ளச் சொல்லி வல்லுநர்கள் அறிவுறுத்திக் கொண்டிருந்தார்கள். நோய்க் கிருமி எல்லா பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தாண்டி உயிர்களை உண்டு கொண்டிருந்தது. பொது மக்கள் நோயாளிகளைப்  பார்க்கும்  அதே பீதியோடுதான் மருத்துவர்களையும், மருத்துவமனை ஊழியர்களையும் பார்ப்பபார்கள். ஏனெனில் நாங்கள் நோய்ப் பரப்பின் அபாயத்தில் உள்ள ஆட்கள். நான் வீதியில் போகையில்   முட்கள் முட்டிகொண்டு  நிற்கும்  தலையோடு  கொரோனோ நடந்து போவது போலத்தான் பார

ரோஜாவின் கையில் ஒரு ரோஜா

போ லிஸ் ஸ்டேசனில் ஒரு முறை மண்டியிட்டுள்ளேன் பஞ்சாயத்துப் போர்டு கிளர்க்கின்  முன் ஒரு முறை ஒரு முறை தாசில்தார் அலுவலகத்தில் அமர்ந்த பாவனையில் விழுந்து கிடந்துள்ளேன் அந்த தணிக்கை அதிகாரி என் கோணல் சிரிப்பை பூட்ஸ் காலை  நாவால் நக்குவது என்று சரியாகவே புரிந்து கொண்டார் அதனால் "போ" என்று விட்டுவிட்டார். பெரிய அரிவாளின் முன்  ஒரு முறை எச்சில் விழுங்கி இருக்கிறேன் குருட்டு தெய்வங்களின் காலில்  சில முறை விழுந்து கிடந்துள்ளேன் விட்டுவிடச் சொல்லி நீதி நெறி நூல்களின் முன் அழுது அழுது அரற்றியுள்ளேன் உன்  முன் மண்டியிடுவது கமலப் பொய்கையுள் மெல்லச் சரிவது ரோஜாவாகி ரோஜா அளிப்பது கனத்த எடையால் துவளும் என்னை சற்றே இறக்கி வைப்பது

நிறைந்த பின் காலி

பு திய பணியிடத்தில் பெயரறியாத மலர் ஒன்றைக் கண்டேன். அதை " அலரி"என்று சொன்னார்கள். கண்களைப் பிடுங்காத வண்ணம் யாரையும் அழைக்காத ஒரு அழகு ஏழு ஊரில் எந்த ஊரிலும் மணக்காதது ஆயினும் சுகந்தி எதையுமே நிறைக்காமல் இருந்து கொண்டே இருக்கும்  மிதம் அடிக்கடி தலையை பாறாங்கல்லில் முட்டிக்  கொள்ளும் பழக்கத்திற்கு அடிமையான நான் இப்பொழுது  அந்த மலரை தொட்டுக் கொண்டு நிற்கிறேன் அவ்வளவு வாஞ்சையூற நொதி நொதிக்கும் பொறாமையோடு.