புதிய பணியிடத்தில் பெயரறியாத மலர் ஒன்றைக் கண்டேன். அதை " அலரி"என்று சொன்னார்கள். கண்களைப் பிடுங்காத வண்ணம் யாரையும் அழைக்காத ஒரு அழகு ஏழு ஊரில் எந்த ஊரிலும் மணக்காதது ஆயினும் சுகந்தி எதையுமே நிறைக்காமல் இருந்து கொண்டே இருக்கும் மிதம் அடிக்கடி தலையை பாறாங்கல்லில் முட்டிக் கொள்ளும் பழக்கத்திற்கு அடிமையான நான் இப்பொழுது அந்த மலரை தொட்டுக் கொண்டு நிற்கிறேன் அவ்வளவு வாஞ்சையூற நொதி நொதிக்கும் பொறாமையோடு. |

Comments