Skip to main content

Posts

Showing posts from September, 2016

ஒழி !

அவ்வளவு ஜ்வலிப்பு என் கண்களுக்குப் பழக்கமில்லை எனவே உன்னை எடுத்து ஓங்கி உடைத்தேன் இப்போது மங்கிய குண்டுபல்பின் கீழே ஆசுவாசமாய் பீடி புகைக்கிறேன்

வாழி !

உனக்கும் எனக்குமிடையில் ஒன்றுமில்லை என்பதற்குப் பதிலாக இருக்கிறது இந்தச் சண்டை.  இது வாழி!

பிரிவு

புழங்கும் சொல்தான் என்றாலும், பொருள் தேடிப் பார்த்தேன் விஷமம் பிடித்த அகராதியொன்று " பிரிவு என்பது இமைப்பொழுதும் நீங்காதிருத்தல் “ என்கிறது .

இன்றின் கேரட்

                   இன்றைய நிலவரப்படி கால்கிலோ கேரட்  7 ரூபாய்கு விற்கப்படுகிறது நான் எப்படியும் தினமும் குறைந்தது இருநூறு ரூபாய் சம்பாதித்து விடுவேன் ஆக எப்படியும் எனக்கு கேரட் உண்டு கேரட்டுக்கு  இந்த கேரட் நிறம் எப்படி வந்தது ? மேலும், கேரட் எங்கு எப்படி விளைகிறது ? அதன் மூலக்கூறுகள் யாவை ? இந்த வெங்காயமெல்லாம் எனக்குத் தேவையில்லை நமக்கு ஆயிரத்தெட்டு  சோலிகள் கிடக்கின்றன ஓவராகச் சிந்திக்காதே .. இரண்டு மிளகாயைக் சேர்த்துப் போட்டு.. தேங்காயை துருவிக் கொட்டினால்...  அட... டடா... விலைவாசி விண்ணைமுட்டி அதற்கு அப்புறமாய் பறந்தாலும் நம் கேரட்டை நம்மிடமிருந்து யாராலும் பறித்து விட முடியாது போதும் உன் கேரட் புராணம்... நாளை இந்த ப்ளாஸ்டிக் டம்ளர்களை மாற்றி விட வேண்டும் ஒரு மாசத்துக்கும் மேல் ஆகிறது.. ஆமாம்.. மாற்ற வேண்டும்... மாற்ற வேண்டும் நீ உன் டம்ளரை எடுத்துக் கொள்... ஓ.. நீ தான் இல்லை அல்லவா ? சண்டையிட்டுப் பிரிந்து விட்டாய்.. சரி... பிரிந்தால் போய் விட  வேண்டுமா என்ன ? அந்த நீலப்படத்தை போடு ... வேண்டாம்.... த்தூ.... மொழுக்கட

நிலம் நோக்கும் இசை - சாம்ராஜ்

                           இசையின் கட்டுரைகள் குறித்துப் பேசவே   நான் பணிக்கப்பட்டிருக்கிறேன் . என்றாலும், இசையின் ஒரு கவிதையோடு இதைத் தொடங்கலாம் என்றிருக்கிறேன் . காரணத்தோடுதான்... குடும்ப நாய் ; சில சித்திரங்கள் 1. ஒரு குடும்ப நாய் குடும்பத்தை தின்று குடும்பத்தை பேண்டு அதையே தின்று அதையே பேழ்வது 2.  உண்மையில் குடும்ப நாய்களுக்கு  சங்கிலியோ கயிறோ தேவையில்லை 3.  குடும்ப நாய்களை நாம் பரிசோதிக்க  வேண்டியதில்லை .  அவை நிச்சயம் நல்ல சாதி நாய்கள் . 4.  குடும்பநாய்கள்  சமயங்களில்  திருட்டு பூனைகள் 5. குடும்ப நாய்களுக்கு விசாலமான வீடுகள் உண்டு என்றாலும் அவை அழுக்கான விடுதிகளிலே சுத்தமான காற்று கிடைப்பதாகச் சொல்கின்றன . எனவே சில நேரங்களில் சொந்த ஊரிலேயே அறை எடுத்து தங்குகின்றன . 6.  குடும்ப நாய்களிலும் பெட்டைகள் இன்னும் பாவம்  அவை பாத்ரூம்களில்  மட்டும் நடமான அனுமதிக்கப்பட்டவை 7.  குடும்ப நாயின் கர்ப்ப குட்டிகளின்  வயிற்றில் வளர்ந்து வருகிறது .  சல