Skip to main content

Posts

Showing posts from July, 2020

மலரில் ததும்பும் ஒன்று

த தும்புவதைக் காணும் போது மனிதனுக்கு என்னவோ ஆகிவிடுகிறது. கடற்கரைகளில் கூட்டம் அலைமோதுகிறது. மலரில் ததும்பும் ஒன்றை யுகயுகமாக கண்டு தீர்க்கிறான் கவி ஒரு வயலின் ததும்பும்போது சகலமும் ததும்பிவிடுகிறது. பெண்ணின் காலடியில் கொட்டிக்கிடக்கின்றன கணக்கற்ற மண்டையோடுகள். எல்லாம் அவளில் ததும்பும் அதுவைக்  காண வந்தவை. 

அன்புள்ள சாம்ராஜிற்கு - வரதராஜன் ராஜு

சாம், நேற்று சட்டென்று பேச வரவில்லை. ஆனால் பேசியிருக்க வேண்டும். விஜியைப் போல நல்ல வார்த்தை ஒன்றாவது நான் சொல்லியிருக்க வேண்டும். அந்தச் சொல்லுக்காகவும் அது தந்த தூண்டுதலுக்காகவும் விஜிக்கு எனது நன்றி. உங்களுக்கும் சரோவிற்கும் மணமாகி ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன. நீங்கள் அதை மண வாழ்வு என்று சொல்ல மாட்டீர்கள். அதனாலென்ன. குழந்தைகள், அவர்களை வளர்ப்பதற்கான ஒரு கூரை, அதைச் சாதிக்கும் பொருட்டான ஒரு பொருளியல் செயல்பாடு என்ற ஒன்றை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் பெயரிட்டுக் கொள்ளலாம். இந்த ஆறு வருடத்தில், முதல் இரண்டு வருடங்கள் உங்கள் இருவருக்கும் அலைக்கழிப்பான நாட்கள். ஆரண்யா வந்த பிறகான நான்கு வருடங்களே நீங்கள் ஒரே கூரையின் கீழ் அமைந்தீர்கள். அது பெசண்ட் நகர் வீடு என்றழைக்கப்பட்டது. நண்பர்களுக்கிடையில் சுருக்கமாக 'பெசண்ட் நகர்' என்றே அழைக்கப்பட்டது. ஒரு நான்கு வருடங்களில் அந்த வீடு ஒரு பெரிய சாப்பாட்டு மேசையென்றாகிவிட்டிருக்கிறது. நான் சிறு வயதிலிருந்தே பெருங்கூட்டமாக உணவருந்திப் பழக்கப் பட்டவன். சிறு வயதில் வீடு ஆளும் பேருமாக இருக்கும். உங்களுக்குத் தெரியும் வீட்டாட்களே எப்பொழுது

ஒளிந்து கொள்ளத் தெரியாத குழந்தையின் பெயர்தான் காதல்

கெ டாமீசை தடியனொருவன் குழந்தையின் கழுத்தைத் திருகப் பார்த்தான் தூண்களைப் போன்ற கால்களுக்கிடையில் புகுந்து அது தப்பியோடியது. தடியன் துரத்திக் கொண்டோடினான். பொந்து போன்ற மறைவிடத்தில் குழந்தை சுருண்டு ஒளிந்து கொண்டது. தடியன் இப்போது தோல்வியில் உறுமும் வெறிமூண்ட விலங்கு. அளந்து வைத்தது போன்ற கச்சிதமான பொந்து குழந்தையைக் காத்தருளி விட்டது. பெரிய ஆபத்து நீங்க இருந்த தருணத்தில் பொடிக்கல் ஒன்றை எடுத்து தடியனின் பிடரிமேல் எறிகிறது குழந்தை.

பிரார்த்தனை

தொ ண்டைக்குழிக்குள் குச்சியைச் செலுத்தி சளி சேகரித்த அந்தத் தாதி மல்லிகை சூடியிருந்தாள். மல்லிகையின் கீழ் அமர்ந்து பரிசோதனை செய்து கொண்டேன். நான் மருந்துவரைக் காண்பேன். மருந்துகள் எடுத்துக் கொள்வேன். அரசு சொல்லும் அறிவுறுத்தல்களை தவறாது கடைபிடிப்பேன். ஆனால், மல்லிகையே ! நான் உன்னைத்தான் நம்பியுள்ளேன்.

சிசு

வா ன் நோக்கி மல்லாந்திருக்கிறேன் மொட்டைமாடி தொட்டிலென்றாட. இப்போது ஒரேயொரு தேன்ரப்பர் போதும்.

மோக நாடகம்

வெ கு தொலைவிலிருக்கும்  உன்னைக் காணும்  மோகம் பற்றிக்கொண்டு விட்டது. நீ அங்கே  இருப்பாயோ மாட்டாயோ தெரியவில்லை. கிளம்பிவிட்டேன். சில டீ க்கள் நிறைய வானம் எண்ணற்ற மரங்கள் பலப்பல வேகத்தடைகள் வந்து கொண்டிருக்கிறேன் வழியெங்கும் நீ இருந்தாய் பத்தாய் நூறாய் உன்னை நெருங்கும் தறுவாயில் ஆயிரமாயிரமாய் அனந்த கோடியாய் உன் இருப்பிடத்திற்குள் நுழைகிறேன் நல்லவேளை நீ அங்கு இருந்தாய். ஆயினும் ஒன்றாய் ஒரே ஒன்றாய்..