Skip to main content

Posts

Showing posts from February, 2018

மனையாட்டி

மனையாட்டி ஊருக்கு போயிருந்த நாளில் தன்னிச்சையாக மொட்டை மாடிக்குப் போனான் கருநீல வானத்தில் கரைந்து நின்றான் குறைமதிக்கும் நெஞ்சழிந்தான் நட்சத்திரங்களில் மினுமினுத்தான் அவள் வீட்டில் இருக்கையில் இவ்வளவு பெரிய வானம் இத்தனை கோடி விண்மீன்கள் இப்படி  ஜொலிக்கும் நிலவு இவையெல்லாம்  எங்கே ஒளிந்து கொள்கின்றன  என்று   ஒரே ஒரு கணம் யோசித்தான். மறுகணம் அஞ்சி நடுங்கி " miss u" என்றொரு குறுஞ்செய்தி அனுப்பினான்.

மல்யுத்தம்

வழக்கம் போல் கதவை எட்டி உதைத்தேன்.
முரண்டு பிடித்தது மறுபடியும் உதைத்தேன் மறுபடியும் முரண்டது மூன்றாவது உதைக்கு என் காலைப் பற்றி தூரத்தில் எறிந்தது எழந்து வந்து மீண்டும் முயல்கையில் அது ஆடாது நிற்க நான் குப்புற விழுந்தேன். கபாலத்தால் வெறிகொண்டு  முட்ட கிறுகிறுவென்றது  உலகம் உன்னையும் விட்டு விட்டால் உதைக்க   ஓர் ஆளில்லை மல்யுத்தனின் புடைத்தெழுந்த தேகத்துடன் நான் ஓடோடி வருவதைப் பார் என்னையே தூக்கி உன் மேல் எறிந்து பொடிப் பொடியாக்குவேன் காண்.

ரோஜா

நீ
ரோஜாக்களோடு ரோஜாவாய் அமர்ந்திருப்பது போல் ஒரு " DP" யைக் கண்டேன்  விசாரித்த போது, " அது ஒரு பழைய போட்டோ... "என்றாய் தெரியும் அன்பே... ரோஜாக்கள் எப்போதும் கடந்த காலத்தில்தான் பூக்கின்றன.

தேனொடு மீன் – குகன்சரிதம்

   இராமனாகிய தேனும், குகனாகிய மீனும் ஒருவரையொருவர் கண்டு , களிப்பெய்தி, கண்ணீர் பெருக்கி, ஒருவருள் ஒருவர் புக்கு, பிரிந்தும் பிரியா நின்றதைப் பேச விழைகிறது இக்கட்டுரை. இராமயணத்தை வாசிக்க இராம பக்தி அவசியமில்லை.பொதுவுடமைச் சித்தாதங்களில் இறுதி வரை உறுதிப் பிடிப்போடு இருந்த தோழர் ஜீவா கம்பனை விடவில்லை. இராமயணத்தின் வற்றாத இலக்கிய வளங்களை அவர் புறக்கணிக்கவில்லை.உடல் முழுக்க திருநீறு பூசி, கைகளில் சப்ளாக் கட்டைகளைக் கொடுத்து, அவர் இராமபஜனை செய்வதாக தி.மு.கழகத்தார் கேலிச்சித்திரம் தீட்டிய போதும் அவர் பின்வாங்கவில்லை. நாமும் பின்வாங்க வேண்டியடிதில்லை.“அறிஞர் காதற்கு அமை விருந்துதான்“ அவன். இராமன் பெயரால் நிகழும் குருதிப் பெருக்கிற்கும் அவனுக்கும் தொடர்பில்லை.அவன் கைகளில் இருப்பது அநீதிகளுக்கெதிரான கோதண்டமே என்றும், அது பர சமயத்து கர்ப்பிணி பெண்களின் வயிற்றில் இறங்கும் பிச்சுவா அல்ல என்றும் நம்புவது, தேவையற்ற மனத்தடைகளிலிருந்து நம்மை விலக்கி வைக்கும். தவிரவும் இராமகாதை வெறுமனே இராமகாதை மட்டுமல்ல.இந்தக் கட்டுரையின் நாயகனும் குகன்தான். இராமன் குகனை பெருமை செய்யும் ஒரு துணை மட்டுமே.

   கம்பனில் …