Skip to main content

வாய்ஸ் மெசேஜ் பாவங்கள்


தூராதி தூரம் சென்றுவிட்டாய் நீ

உன் குரல்களோ 

என்னிடமே தங்கிவிட்டன.

காலம் 

பேச்சைப் பாட்டாக்க வல்லது

அடீ ... ! 

அந்தப் பாடல்களை இனி கேட்கவே முடியாது.

உபயோக்கிக்கவும் முடியாத

தூக்கியெறியவும் முடியாத பொருட்களின்

துருவோடு துருவானது நம் நேசம்


லேசாக அழுத்திப் பிடித்தால் போதும்

எல்லாவற்றையும் 

அழித்து விடலாம் என்கிறது

 நவயுகம். 


அவ்வளவு பலத்திற்கு

நானெங்கு போவேனென

மறுகி நிற்கிறது

ஒரு பழைய உயிர்


Comments

Popular posts from this blog

நினைவோ ஒரு பறவை

  இ ந்தமுறை மருத்துவர்  கண்டிப்பாகவே சொல்லிவிட்டார்… “நீங்கள் கண்டதையும் போட்டுக்  குழப்பிக் கொள்ளக் கூடாது”  எனக்கு ஓரளவு புரிகிறது தேநீர் மட்டுமே இருக்கும் தேநீரைச் சொல்கிறார் ‘கடி' க்கு வேறொன்றும் கூடாதென்கிறார் சலனமற்ற குளத்தைத்தான் சொல்கிறார்  எனில், எனது  நான்கு கழுதைகளையும் எங்கு வைத்துக்  குளிப்பாட்ட? எனக்கு நன்றாகவே புரிகிறது சாமான்ய நிலையிலிருந்து என்னை  சாமாதி நிலைக்குத் தூக்குகிறார்  மறைஞானத்தை மாத்திரையாக்கப் பார்க்கும்  இந்த நாச்சிமுத்து ஒரு வேளை ‘ லாவோட்சு' வின் வம்சாவழியோ என்னவோ? “இப்போதுதானே சொன்னேன்…” என்றொரு குரல் உலுக்க விழித்தேன் பாருங்கள்,  அதுகூட அவர் அதட்டியதில்லை நான் அதட்டியதுதான்.

பினாயில் பாட்டிலும், குச்சித்துடைப்பமுமாய் ஒரு வசந்த சுந்தரன்

   ஒ ருவர் இன்னொருவருக்கு சால்வை அணிவிக்கும் அரசு அலுவலகத்தின் சம்பிரதாயமான நிகழ்வு அது ஊழியர்களும், அதிகாரிகளும் வரிசை கட்டி நிற்கிறார்கள் போட்டோவில் சம்பிரதாயமாக நிற்பது எப்படி என்பதை யாரும் அவர்களுக்குச் சொல்லித் தர வேண்டியதில்லை வரிசைக்குப் பின்னே தட்டிக்கும் பின்னே குதிகால்  உயர்த்தி தலை மட்டும் நீட்டி  ஒரு உருவம் மொத்தப்  படமும் அதுவே ஆகி என் சிந்தையை அழைக்கிறது போட்டோவில் விழுந்துவிடும் துடிப்பல்ல அது மூளியை  அலங்கரிக்க    வந்தவன் போல் அவன் வருகை

காதலைப் பாடாதிருப்பதன் கடினம்

காமம் வதைக்காத உயிர் எது? எவ்வளவு லட்சியங்களை, எவ்வளவு உன்னதங்களை காவு கொள்ளும் காளி அது? எத்தனை மகத்துவங்கள் அதன் முன் வாலைச்சுருட்டி கொண்டு மூலையில் அமர்ந்திருப்பதை நாம் பார்த்துவிட்டோம். சங்கக்கவித் திரட்டு முழுக்கவும் தலைவியரைப் பசலை படாத பாடு படுத்தியுள்ளது. பரணர் பசலைக்கு கிணற்றுப் பாசியை உவமை சொல்கிறார். ஊரார் உண்ணத் தொடும் போது அது விலகி நிற்கிறது. மறுகணமே திரண்டுவிடுகிறது. அது போல் தலைவன் தொடுந்தோறும் தொடுந்தோறும் விலகி , விடுந்தோறும் விடுந்தோறும் பாய்கிறதாம் பசலை. ஒரு புலி போலவா? ஆம்... கபிலர் கவித்துவத்திரட்டின் அடுத்த கட்டுரை இன்றைய அகழ் மின்னிதழில் வெளியாகியுள்ளது. முழுவதும் வாசிப்பதற்கான இணைப்பு கீழே  உள்ளது. https://akazhonline.com/?p=13223 நன்றி அகழ்!