Skip to main content

நினைவோ ஒரு பறவை

 


இந்தமுறை மருத்துவர் 

கண்டிப்பாகவே சொல்லிவிட்டார்…


“நீங்கள் கண்டதையும் போட்டுக்  குழப்பிக் கொள்ளக் கூடாது” 


எனக்கு ஓரளவு புரிகிறது

தேநீர் மட்டுமே இருக்கும் தேநீரைச் சொல்கிறார்

‘கடி' க்கு வேறொன்றும் கூடாதென்கிறார்

சலனமற்ற குளத்தைத்தான் சொல்கிறார் 

எனில்,

எனது  நான்கு கழுதைகளையும்

எங்கு வைத்துக்  குளிப்பாட்ட?


எனக்கு நன்றாகவே புரிகிறது

சாமான்ய நிலையிலிருந்து

என்னை 

சாமாதி நிலைக்குத் தூக்குகிறார் 


மறைஞானத்தை மாத்திரையாக்கப் பார்க்கும் 
இந்த நாச்சிமுத்து

ஒரு வேளை ‘ லாவோட்சு' வின்

வம்சாவழியோ என்னவோ?


“இப்போதுதானே சொன்னேன்…”

என்றொரு குரல் உலுக்க விழித்தேன்

பாருங்கள், 

அதுகூட அவர் அதட்டியதில்லை

நான் அதட்டியதுதான்.



Comments

Popular posts from this blog

பினாயில் பாட்டிலும், குச்சித்துடைப்பமுமாய் ஒரு வசந்த சுந்தரன்

   ஒ ருவர் இன்னொருவருக்கு சால்வை அணிவிக்கும் அரசு அலுவலகத்தின் சம்பிரதாயமான நிகழ்வு அது ஊழியர்களும், அதிகாரிகளும் வரிசை கட்டி நிற்கிறார்கள் போட்டோவில் சம்பிரதாயமாக நிற்பது எப்படி என்பதை யாரும் அவர்களுக்குச் சொல்லித் தர வேண்டியதில்லை வரிசைக்குப் பின்னே தட்டிக்கும் பின்னே குதிகால்  உயர்த்தி தலை மட்டும் நீட்டி  ஒரு உருவம் மொத்தப்  படமும் அதுவே ஆகி என் சிந்தையை அழைக்கிறது போட்டோவில் விழுந்துவிடும் துடிப்பல்ல அது மூளியை  அலங்கரிக்க    வந்தவன் போல் அவன் வருகை

அன்புள்ள தம்பிக்கு

  இ ன்று அதிகாலையில் ஒரு தத்துவத்தை அனுப்பியிருந்தாய் பிறகு அரை மணி நேரம் கழித்து ஏனோ நீ அதை அழித்தும் விட்டிருந்தாய் அந்த  உண்மை உண்மைதான் அது எனக்குப்  பிடித்தே இருந்தது. அதை அவ்வளவு உறுதியாக அழித்துவிட்டதன் மூலம் நீ இன்னொரு உண்மையைச் சொல்கிறாய் அதுகூட  உண்மையாகத்தான் இருக்க வேண்டும் ஒரு உண்மையிலிருந்து இன்னொரு உண்மைக்குப் போக 30 மணித்துளிகள் போதும் என்கிற உண்மை இருக்கிறதே உள்ளதிலேயே  முக்கியமான உண்மை அதுதான் தம்பி