Skip to main content

கவிதை


தென்றல் என்றழைக்கப்படும் ஞாயிற்றுகிழமையின் காற்று




பிஸ்கட்டைப் பிட்டு
தேநீரில் நனைத்து சுவைப்பது போல
இந்த ஞாயிற்றுகிழமையைப் பிட்டு
ஒரு கோப்பை மதுவில் நனைத்து சுவைக்கிறேன்.
மூளைக்குள் கத்திக்கொண்டிருந்த
அலுவலகத்தின் நா
அறுக்கப்பட்டு விட்டது.
மைதானங்களில் மகிழ்ச்சி
ஒரு ரப்பர் பந்தென
துள்ளிக்கொண்டிருப்பதை பார்க்கிறேன்.
இக் கொதி நிலம் திடீரெனக் குளிர்ந்து
பெய்கிறது ஒரு ரம்யமான மழை.
ஞாயிற்றுகிழமையின் காற்றுக்குதானா தென்றல் என்று பெயர்
என்றொரு வரி தோன்றியது.
இதையடுத்து உருகிவழிந்த
கண்ணீரின் துளியொன்று
கோப்பைக்குள் சிந்த
எடுத்து அருந்தினேன்.
தாளாத தித்திப்பு அது!
தாளாத தித்திப்பு அது!

Comments

Mohan said…
கவிதை ரொம்ப நல்லா இருந்ததுங்க!
Anonymous said…
nalla irunkuthu.
SELVARAJ JEGADESH
தலைவரே

ரொம்ப நல்லா இருக்கு

ரொம்ப நேரம் மௌனமா இருந்தேன்

:)
தாளாத தித்திப்பு இது!

தாளாத தித்திப்பு இது!
தூள் நண்பா.. அந்த ஓய்வு நாளின் இதம் மனதின் உள்ளே இறங்குகிறது..:-)))