Skip to main content

தற்கொலைக் கவிதையின் முலை




நாம் ஓடிப்போய் ஒரு தற்கொலைக் கவிதைக்குள் ஒளிந்து கொள்கிறோம்.
துரத்திவந்த தற்கொலை
எங்குபோனான் என்று தெரியாமல் குழம்புகிறது.
கவிதை தற்கொலையின் ஜென்மசத்ரு.
மனிதனுக்கு அரவமும் அரவத்திற்கு மனிதனுமாக
கடவுள் கவிதையையும் தற்கொலையையும் படைப்பித்தார்.
கால்களை தப்ப விட்டு விட்டு
நிலத்தை ஓங்கி ஓங்கி கொத்துகிறது தற்கொலை.
ஒரு தற்கொலை கவிதையின் முலை
கச்சணியாதது
உலகெங்கும் வாழும் பித்தன்கள் கடித்து கடித்து பாலுண்பது
தற்கொலை கவிதையின் முலை ஒரு பருவுடல் தாளாதது
மனுஷி எவளிலும் வளரவே வளராதது
மாமுலை போற்றுதும் !
மாமுலை போற்றுதும் !

Comments

போற்றுக... போற்றுக.

”மனுசி எவளிலும் வளரவே வளராதது”

கவிதையா? தற்கொலையின் அழைப்பா?:))
நாம் நம்பியிருக்கும் சில மனுசிகள் தன் தாய்மையின் முலையை
பிடுங்கிக்கொள்ளும் போதும், கவிதையின் முலை
ஒரு லூசுக்கு கவிஞனுக்கு என்றென்றைக்குமாக திறந்திருக்கிறது தமிழ்.

Popular posts from this blog

வாழ்த்து

  அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய  துப்புரவு  பணியாளிடம்  நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே  ஆனாலும் இருபத்தைந்துதான்.."

இருவர்

வெ க்கையும் சரக்கொன்றையும் ஒன்றாக வந்துவிட்டனர். வாசலில் வந்து நிற்கும் இருவரில் ஒருவரை மட்டுமா உள்ளே அழைக்க முடியும் ?

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...