Skip to main content

தோத்தகாலிகளின் பாடல் வருகிறது....







ரஜினிசார், அந்த ஏரி இப்போது கடலாகிவிட்டது.
பொங்குமறிகடல்....
இன்று நீங்கள் தனியனுமல்லன்
தொடுவானம் முட்டி நிற்கும் எண்ணற்ற படகுகளில்
அமர்ந்திருக்கும் எல்லோரும் நீங்கள்தான்.
நமது பரட்டைத்தலைகளை காற்றில் சிலுப்பிக்கொள்வோம்
நாமெதற்கும் பொறுப்பல்ல..
நம்மை துடுப்புவலிக்க வைத்தவன் எவனோ
அவனே அவர்களை நீருக்குள் பிடித்து தள்ளினான்
கண்களை மூடி ஒருமுறை காண்போம்
அந்த முத்தன்ன வெண்நகையை..
பிறகு பாடுபோம் நம் பாடலை...
கண்டம் கருக்கடிக்கும் அப்பாடலை...
வஞ்சத்தில் கமறும் பலநூறு குரல்களின்
ஒத்திசையா ஊளையிது.
நாம்  இக்கடலின் கர்ணத்தில் கடூரத்தை ஊதுவோம்.
ஊழி எழுந்து
நீள்விசும்பலைந்து
ஊர்புகுந்தாட,
நம் ஆளுயரப்  பெருமூச்சில்
நீதியின் மலைதீபம் பொசுக்கென்று அணைகிறது

Comments

வசந்த கால நதிகளிலே....
வசந்த கால நதிகளிலே...
ganesakumaran said…
வசந்த கால நதிகளிலே...