நீள்விசும்பினில் உயரப் பறந்தும்
மா நிலத்திடை ஆழ உழுதும்
சஞ்சய் பாடுகிறார்
சஞ்சய் பாடுகையில்
மைக்கும் ஒரு இனிப்புப் பண்டம்தான்
அதன் வடவடப்பில் மொய்த்துக் கொண்டிருக்கிறது
ஒரு ஈ
அவர் அவ்வளவு நெருங்கி வருகையிலும்
அது ஆடாது அசையாது அமர்ந்திருக்கிறது.
மத்தளங்களின் கொட்டும், நரம்புகளின் நாதமும்
விரட்டுவதற்குப் பதிலே
அதை மேலும் மேலும் இருக்கச் செய்கிறது.
அதிகாலை இளங்காற்றின் ஏகாந்தியென
மின்சார ஒயர்களின் மேல்
ஊர்ந்து கொண்டிருக்கிறது.
மகத்தான விஷயங்களின் மீது
ஈயாயிரு மடநெஞ்சே! (நன்றி : தடம் - அக்டோபர்-18)
Comments