Skip to main content

QUOTE - களின் காலம்


           




1.
      “ எதை நீ  கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு..."
 என்கிற கோட்டின் வழியே
 கடவுள் தன் சிம்மாசனத்தை உறுதி செய்து ஜம்மென்று   அமர்ந்துவிட்டார்.
 

 2.

       தேவனால் கூடாததும், அவன் வாக்கினால் கூடும்.


3.
    கன்னியாகுமரியின் சமுத்திர சத்தத்திற்கு மத்தியில்
  எவ்வளவு கம்பீரமாக நிற்கிறது
  ஒரு கோட் !

4.
    வையத்துள் வாழ்வாங்கு வாழ்கிறான் வால்டேர்
    ஒரு கோட்டாக.



5
        கோட்களின் காலம்  முடிந்து விடக்கூடாது என்பதற்காக 
       நிகழ்த்தப்பட்ட  திருவிளையாடல்தான்
       பேப்பர்பாய்  ஜனாதிபதியான படலம்
      

6
      வெறுங்கை என்பது மூடத்தனம் ; விரல்கள் பத்தும்   மூலதனம்
    என்கிற கோட்டிலிருந்து
    பிறந்து வந்தவைதான் இந்த நகரத்திலிருக்கும்
    அத்தனை பேக்கரிகளும்.

7.
     
     எரிபொருள் இல்லாமலும் ஆட்டோக்கள் ஓடும் ;
     ஆனால் கோட்களின்றி ஓடாது
      என்பான் புத்திசாலி.
  
  8.
 
     இல்லத்து அரசியரே!
     உங்கள் மனாளனின் அடிவயிற்றில்
     ஓங்கி ஒரு உதை விட
    பொன்னான வாய்ப்பு....
     பதிவிறக்கம் செய்வீர்
    " share chat "


9.
    நட்பிலிருந்து காதலுக்கு அழைக்க
    100 கோட்கள் தேவைப்படுகின்றன.
    காதலிலிருந்து கட்டிலுக்கு  நகர்த்தவோ
   ஆயிரம் வரை  செலவழிக்க வேண்டியிருக்கிறது
  என்று அலுத்துக் கொள்கிறான் 
  ஒரு தத்துவாசிரியன்.


 10.
        
  உன்  800 பக்க நாவலில் 
  அந்த இரண்டு வரிக் கோட்டை நீக்கி விடச்             சொன்னால்
 ஏன் பதறியடித்து ஓடுகிறாய் தஸ்தேவ்யஸ்கி ?



11.
     கோட்களை கேலி செய்து நீ எழுதிய கோட்தான்
     இன்று
    கோட்களுக்கெல்லாம் மேலான  கோட்டாக
    கோலோச்சிக்  கொண்டிருப்பதை
    அறிவாயா நாகராஜா?

12.
    பிடித்துத் தொங்க  கோட்களேதும் மிச்சமில்லை
   என்றான பிறகுதான்
   ஒருவன் தூக்குக் கயிற்றில் தொங்கி         விடுவதென்ற   தீர்மானத்திற்கு வருகிறான்.

13.
   எனதருமை கோட்களே !
   நீங்கள் கடவுளரைப் போலன்றி  ஓரவஞ்சனை செய்யாதிருங்கள் !


            நன்றி : காலச்சுவடு- செம்டம்பர்-18
  
 

Comments

nikkisa889 said…
Can I just say what a aid to seek out someone who really is aware of what theyre talking about on the internet. You definitely know find out how to bring a difficulty to light and make it important. More folks need to learn this and understand this facet of the story. I cant imagine youre not more common because you positively have the gift. gsn casino slots
நாளை மற்றுமொரு நாளே

Popular posts from this blog

மலைக்கு அப்புறம் என்ன?

என் ஊருக்குப் பின்னே  ஒரு  மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம்  வாழ்வைக் கண்டு பிடிக்க  இப்படிக்   கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை  அடிவாரத்தில்  ஓர்  ஆட்டிடையன்   இருக்கிறான்  எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம்  ஆடென.                நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18

தெய்வாம்சம்

                                                                            தெய்வம் இருக்கிறதோ இல்லையோ “ தெய்வாம்சம்” என்கிற ஒன்று நிச்சயம் உண்டு. அந்த “ தெய்வாம்சம் “  கூடி வரப்பெற்ற கலைப் படைப்பென்று “ 96 “ திரைப்படத்தைச் சொல்லலாம். இல்லையெனில்  வள்ளலார் தனது “ தனிப்பெருங்கருணை “ என்கிற மகத்தான சொல்லை ஏன் கார்த்திக்நேத்தாவின் சிந்தைக்கு அருள வேண்டும்? “தனிப்-பெருந்–துணை “ என்கிற சொல்லாக்கம் கதையின் மையத்தைத் துல்லியமாகத் தொட்டு விடுகிறது. தவிர அந்தப்பாடல் முழுக்கவே காதலின் “ அருட்பிரகாசம் ” இறங்கியிருக்கிறது. நம்மில் பாதி அன்றாடத்தின் முடை நாற்றத்துள் கிடக்கிறது. மறுபாதியோ அதிலிருந்து தப்பியோட தருணம் பார்த்துக் காத்துக் கிடக்கிறது. அந்த வயலின் குச்சி நம்மை அழுக்குகளிலிருந்து தூக்கிக் கொண்டு வேறெங்கோ பறக்கிறது.     வாதைகளை ஏவி விடுவதில் வல்லவரான இளையராஜாவின் பாடல்கள் படத்தில் ஒரு முக்கியப் பாத்திரமாக மாறியிருக்கிறது. வாத்தியங்களோடு இசைக்கப்படும் பாடல்களில் ஒருவித “ திருவிழா தன்மையும் ” கலந்து விடுகிறது. அங்கு நாம் தொலைந்து போகிறோம். தனித்த மனிதக்குரலில் இருப்பதோ தன்னந்தனிம