ஓர் ஆனந்தக் கூவல் என் பெயர் சொல்லி அழைத்தது. எங்கோ தொலை தூரத்தில் அடியாழத்தில் அலைந்து கொண்டிருந்த என் கார் நிலைக்குத் திரும்பி விழித்தது. பள்ளித் தோழனொருவன் நகரசுத்தி தொழிலாளியாகி மக்கும் குப்பைக் குவியல்களுக்கிடையே தலைநீட்டி கையசைக்கிறான். அவன் பதுங்கி ஒளியாத அந்த இடத்தில் மலர்ந்து சிரிக்கிறது விடிய விடிய ஏடுகளில் மூழ்கி நான் துப்பறிந்தும் காணாத ஒன்று. |

Comments