மறுமுனையில் காதலன் விடாது கெஞ்சிக் கொண்டேயிருக்கிறான் இவளோ தலையை ஆட்டி மண்ணைக் கீறி நாணி நாணி கோணிக் கோணி மறுத்துக் கொண்டிருக்கிறாள் கடைசியில் ஒத்துக் கொண்டாள் " ஒரே ஒரு வரி ..." அவளுக்கு கொஞ்சம் தள்ளி அமர்ந்திருக்கிறான் இந்தத் தடியன் ஆகவே அவள் குரலில் ரகசியத்தைக் குழைக்கிறாள் ரகசியம் பேச்சையே பாட்டாக்குவது பாட்டை அது என்னென்ன செய்யும் அடுத்த முறை இன்னும் அவளை நெருங்கி அமர்வேன் இன்னும் அவளை ரகசியமாக்குவேன். |

Comments