ஒ ளி விளக்குகளால் சுற்றப்பட்ட உயர்ந்த கம்பத்திற்குக் கீழே பளீரென ஒரு தள்ளுவண்டி அதில் பளீரென விரிக்கப்பட்டிருக்கும் சிவப்பிற்கு மேலே பளீரென சில பச்சைப் பழங்கள் கடந்து செல்லும் ஒவ்வொருவரையும் பளீராக்கியபடி “மோரிஸ்… மோரிஸ் … ‘என்று அந்தத் தாத்தா வேறெதையோ விற்றுக் கொண்டிருக்கிறார்.