Skip to main content

பால்ய பருவமென்பது..





உங்கள் பால்யத்தைக் கேட்டால்,
நீங்கள்
கூடைச்சேருள் அமர்ந்து சிரிக்கும் ஒரு குழந்தையையோ
விறைத்த ட்ரவுசரும்,விறைத்த முகமுமாய்
சீருடையில் நிற்கும் ஒரு பள்ளிச்சிறுவனையோ காட்டுகிறீர்கள்.
ஒருவன் தன் கல்லூரி ஆல்பத்தைக் காட்டுகிறான்.
அதில் அவன் பல் முப்பத்திரண்டும் தெரிகிறது.
நான் நேற்று காலை எடுத்த என் புகைப்படத்தைக் காட்டுவேன்.

பால்யத்தின் வாகனத்திலேறி
பால்யத்தின் கனவுகளோடு
தொலைதூர மலைவெளிக்கு போகிறது ஒரு காதல்.
அது கட்டிக்கொள்ள
எண்ணற்ற கொண்டை ஊசி வளைவுகளை சமைத்து வைத்தீரே,
வாகனத்தில் நிரப்பப்பட்டிருக்கும்
பால்யத்தின் காற்றை
அது வீடு திரும்பும் வரையிலேனும்
பிடுங்கி விடாதிருப்பீரா ஆண்டவரே..
நம் இனிப்பினிப்பான கற்பனைகள்
ஒரு முடிவுக்கு வரும் தறுவாயில்
கூடைச்சேர்கள் காலொடிந்து சரிகின்றன.
நம் குழந்தைமையின் அமர்ந்தகோலம்
நடுநடுங்கியாடி
தொப்பென்று கீழே விழுகிறது

Comments

இசை, நீங்கள் கவிஞர் என்பதில் எனக்கு என்றைக்குமே சந்தேகம் இருந்ததில்லை.

வழக்கம்போல, நல்ல கவிதை.

“நண்பரே“என்ற விளிக்கப்படும் தகுதியை என்றேனும் பெறுவேன்?
” டா” வில் அழைக்கபடும் நாளுக்காக
காத்திருக்கிறேன்..
Anonymous said…
சுட்டியை சொடுக்கி படிக்கவும்.

தமிழன் ஒரு இளிச்சவாயன். ‍ ஜடம்.
ரொம்ப நல்லா இருக்குங்க (உங்கள் பெயரும் தான்)
கவிதையின் இறுதியில் விண்ணுக்கும் மண்ணுக்கும் வியாபகமெடுத்து நிற்கிறான் இசை.கவிதையில் அவன் கொற்றம் நெடுநாள் வாழும்!!!
உருகுவேயிலும் இன்று
" சனிக்கிழமைதான்" போல
என் இனிய நண்பனே,

உங்கள் எல்லோரோடும் சேர்ந்து அந்த நாளைக் கொண்டாட முடியாத ஏக்கத்தை உங்களது பதிவு பல மடங்காக்கிவிட்டது.
இசை கூட்டத்தில் நல்ல பிள்ளையாக வெகு அமைதியாக இருந்தாரே என்?

சமயவேல்

Popular posts from this blog

அன்புடையீர்!

  "நா ன் உன்மீது கோபமாக உள்ளேன்" என்றொரு செய்தி வந்தது. நானும் கூட  என் மீது நெடுநெடுங்காலமாக கோபமாகவே உள்ளேன். என்னை என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை அதுவேதான் அன்புடையீர் உமக்கும்

மலைச்சாரலில் மையல் யானைகள்

கபிலர் கவித்துவத்திரட்டில் ' குறிஞ்சிப் பாட்டு' குறித்து எழுதியுள்ள கட்டுரை  அகழ் இணைய இதழில் வெளியாகியுள்ளது. காதல் மெல்ல அணுக வேண்டிய ஒன்றல்லவா? பஸ் போய் விட்டதா? மணி என்ன? மழை வருமா? வெய்யில் அதிகம்? விஜய் அட்டகாசம்? டொனால்ட் டிரம்ப் படு மோசம்? இன்னும் இப்படி சம்பந்தமில்லாமல் பேசிப் பேசிப் கடைசியில் உங்க பேர் என்ன? என்கிற கேள்விக்கு வருவதுதானே காதல் ? இன்றைய இளைஞர் கூட்டம் இதற்கு ’ நூல் விடுதல்’ என்று நாமகரணம் சூட்டி உள்ளது. நூல் அறுந்து விட்டதென்றால் அவன் பாச்சா பலிக்கவில்லை என்று பொருள். இந்த ’நூல்விடுதல்’ தொல்காப்பியத்திலும் உண்டு. கட்டுரையை முழுமையாக வாசிப்பதற்கான இணைப்பு கீழே  உள்ளது. https://akazhonline.com/?p=12685

சோதிப்பிரகாசம்

இந்தப் பேனாவை அந்த டேபிளின் மீது வை" என்று சொல்லி நீட்டினாள். அவன் அதை வாங்கினான். அவள் நீட்டிக் கொண்டே இருந்தாள் அவன் வாங்கிக் கொண்டே இருந்தான். அவள்  விடவில்லை. அவன் விடுவிக்கவுமில்லை. அங்கு ஒன்றுமே நடக்கவில்லை. அங்கு அவ்வளவு நடந்து கொண்டிருந்தது. அங்கு காலம் ஸ்தம்பித்துவிட்டது. அங்கு காலம் பரபரப்பில் இருந்தது. இப்போதும் அந்த ஒன்றுமற்ற ஒன்றை துலக்கித் துலக்கி  விளக்கேற்றி மகிழ்கிறது நரைமுற்றிய அந்தத் தம்பதி.