Skip to main content

நினைவில் வீடுள்ள மனிதன்





நினைவில் வீடுள்ள மனிதன்

மொரிஷியஸ் தீவிற்கு புறப்படுகிறான்.

கிளம்புகையில்

தன் வீட்டை அடியோடு பெயர்த்துக் கொண்டு போய்

கப்பலில் ஏற்றுகிறான்

பாவம், அது தள்ளாடுகிறது


சென்ற வாரம் அவன் ஒரு சினிமாவிற்குப் போனான்.

சொல்பேச்சு கேளாமல்

அதிவேகத்தில் பைக்கோட்டித் திரியும் தன் இளையமகன்

ஒரு லாரிச்சக்கரத்தில் சிக்கி

உருச்சிதைந்து போவதை அவனதில் பார்த்தான்.



நினைவில் வீடுள்ள மனிதன்

பூங்காக்களின் புதர்மறைவில் தன் மகளையே

காண்கிறான்


நினைவில் வீடுள்ள மனிதனுக்கு

இருபத்தியேழாம் வாய்ப்பாடு

மனப்பாடமாக தெரிந்திருக்கிறது


நினைவில் வீடுள்ள மனிதனின்

கேஸ் சிலிண்டர் தானாகவே திறந்து கொள்கிறது

அவன் அலுவலகம் போனதும்

அது “ டும்” என்று வெடிக்கிறது.


நினைவில் வீடுள்ள மனிதனின்

தலைக்கு மேலே ஒரு புகைப்போக்கி நீண்டிருக்கிறது

அவனது நெஞ்சத்தில்

ஏதோ ஒன்று எப்போதும் எரிந்து கொண்டிருக்கிறது.


நினைவில் வீடுள்ள மனிதன்

கடல் வழியே போய்

கடல் வழியே திரும்பினானென்றாலும் 

துளிநீலமும் கண்டானில்லை.


                                                                         
நன்றி : ஆனந்தவிகடன்; தீபாவளி சிறப்பிதழ்


     


Comments

வரிகள் சிலிர்க்கவும் திகைக்கவும் வைக்கிறது...!

Popular posts from this blog

வாழ்த்து

  அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய  துப்புரவு  பணியாளிடம்  நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே  ஆனாலும் இருபத்தைந்துதான்.."

இருவர்

வெ க்கையும் சரக்கொன்றையும் ஒன்றாக வந்துவிட்டனர். வாசலில் வந்து நிற்கும் இருவரில் ஒருவரை மட்டுமா உள்ளே அழைக்க முடியும் ?

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...