காலுதைத்துக் கதறும் சிறுவனுக்கு நரைப்பதேயில்லை அவன் இன்னும் இனிப்புப் பண்டத்தின் முன்னே நகராது அமர்ந்திருக்கிறான். எனக்கோ நாடி தளர்ந்து விட்டது. கைத்தடி எதற்கு? அந்தச் சிறுவனை விரட்டி ஓட்டத்தான். ஆயினும் சும்மானாச்சிக்கே சுத்துகிறேன்.
அதலபாதாளம் உறுமிக் கொண்டிருக்கிறது. சொல்லைப் பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறேன் .... பழுக்கக் காய்ச்சிய சொல்லை எடுத்து நெஞ்சில் ஒரு இழு இழுத்தேன் ..... கூவி வருகிறதொரு சொல் அதனெதிரே ஆடாது அசையாது உறுதி காத்து நிற்பேன். பிறகு துண்டு துண்டாவேன். .... கடைசிச் சருகும் காற்றில் பறந்த பிறகு சொல்லைச் சொல்லில் கலந்து குடி .... நஞ்சு திரண்டுவிட்டது. சொல்லே நீலகண்டன்.