Skip to main content

கல்யாணத் தேன்நிலா!

 



ளையராஜா கேட்காமல்


ஜேசுதாசோ, சித்ராவோ கேட்காமல்


கச்சேரித் திரளில் யாரும் கேட்காமல்


என் ஒன்பது காதலிகளில் ஒருத்தியும் கேட்காமல்


கேலி செய்யும் நண்பர் கூட்டத்தில் ஒருவரும் கேட்காமல்


என்னை விரட்டிவிட்ட குருநாதர் கேட்காத போது


தாலாட்டாக்க

முயன்று முயன்று தோற்ற 

என் குழந்தையும் கேட்காத போது


நிலவும், நட்சத்திரங்களும் கூட இல்லாத

நடு நிசியில்

மொட்டைமாடியில் நின்று கொண்டு

கரங்களிரண்டையும் அகல விரித்தபடியே

அந்த கமகத்தில் நான் சரியாக மின்னிவிட்டேன்.


Comments