Skip to main content

பிறந்தநாள் பெண்

 



வள் புத்தாடை அணிந்திருக்கிறாள்.


புத்தாடை கொண்டு வந்து சேர்க்காத புதிதால்

வீதியை இன்புறுத்தியபடியே

மெல்ல மெல்ல நடந்து செல்கிறாள்


சிவா என்கிற ஒருவன்

மிகச் சரியாக

12; 01 - க்கு

 மறக்காமல்

வாழ்த்திவிட்டதாக 

பேசிக்கொண்டு போகிறாள்


நீராடிய கேசத்தை

"யாவும் செழிக்கட்டும்" என்பது போல படரவிட்டிருக்கிறாள்.


இரவு கொட்டிய மழையால்

 வீதிக்கு வந்துவிட்ட சாக்கடை நீருள்

குளிர்ந்த ஆற்றில் மெல்ல இறங்குவது போல

 அடி  எடுத்து வைக்கிறாள்


வேறு வழியேயின்றி

கொஞ்சமாய்

 இறைத்துவிட்ட சேற்று நீருக்காய்

ஓட்டுநர் அவளிடம் வருத்தம் சொல்கிறார்

"படவேயில்லை..." என்று

சொல்லிவிட்டு நடக்கிறாள்


இன்று

இனிப்பைப் பிட்டு 

அவள் எல்லோருக்கும் ஊட்டுவாள்

எல்லோரும்

இனிப்பைப் பிட்டு

அவளுக்கு ஊட்டுவார்கள்.


அவள் ஒரு மக்குப் பெண்ணாக இருக்கலாம்

ஆனாலும்

ஆசிரியரால் இன்று அவளை 

 வசைபாட இயலாது.


இன்று அவளது பிறந்தநாள்.

இன்றுஅவளை 

யாரும் எதுவும் செய்துவிட முடியாது.


Comments

Popular posts from this blog

வாழ்த்து

  அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய  துப்புரவு  பணியாளிடம்  நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே  ஆனாலும் இருபத்தைந்துதான்.."

இருவர்

வெ க்கையும் சரக்கொன்றையும் ஒன்றாக வந்துவிட்டனர். வாசலில் வந்து நிற்கும் இருவரில் ஒருவரை மட்டுமா உள்ளே அழைக்க முடியும் ?

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...