மடிந்தும் மடியாத சாம்பல் மாலையில் சீறிப் பாய்ந்து கொண்டிருந்த என் கார் திடீரென நிதானத்திற்கு வருகிறது. ஊரத் துவங்குகின்றன அதன் சக்கரங்கள். என் வெறிநோய்க்கு குறுக்கே பறந்து வருகிறது கொக்குத் திரள் உண்மையில் எனக்கு ஒரு அவசரமும் இருக்கவில்லை. இங்கிருந்து அங்கு போனாலும் அங்கிருந்து எங்கு போனாலும் நான் ஒரே ஒரு ஆள்தான் உண்மையில் எனக்கு எந்த அவசரமும் தேவையில்லை. நான்கைந்து கொக்குகள் காரின் கூரையை மொய்த்துச் சுற்ற அடைக்கப்பட்டிருந்த கண்ணாடிக் கதவுகளை கடந்து போயின இரண்டு |
இ ந்தமுறை மருத்துவர் கண்டிப்பாகவே சொல்லிவிட்டார்… “நீங்கள் கண்டதையும் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது” எனக்கு ஓரளவு புரிகிறது தேநீர் மட்டுமே இருக்கும் தேநீரைச் சொல்கிறார் ‘கடி' க்கு வேறொன்றும் கூடாதென்கிறார் சலனமற்ற குளத்தைத்தான் சொல்கிறார் எனில், எனது நான்கு கழுதைகளையும் எங்கு வைத்துக் குளிப்பாட்ட? எனக்கு நன்றாகவே புரிகிறது சாமான்ய நிலையிலிருந்து என்னை சாமாதி நிலைக்குத் தூக்குகிறார் மறைஞானத்தை மாத்திரையாக்கப் பார்க்கும் இந்த நாச்சிமுத்து ஒரு வேளை ‘ லாவோட்சு' வின் வம்சாவழியோ என்னவோ? “இப்போதுதானே சொன்னேன்…” என்றொரு குரல் உலுக்க விழித்தேன் பாருங்கள், அதுகூட அவர் அதட்டியதில்லை நான் அதட்டியதுதான்.

Comments