ஒரு முத்தம் பிறக்கிறது வளர்கிறது வளர்ந்து கொண்டே இருப்பது எதுவோ அதுவே முத்தம் ஒரு முத்தம் நினைத்துக் கொள்ளும் போது இரட்டிப்பாகிறது முத்தமிட்டுக் கொண்டவர்கள் துடைத்தெறியப் படுகிறார்கள் முத்தம் இன்னும் அங்கேயே அப்படியே மின்னிக் கொண்டிருக்கிறது. பிறந்ததனைத்தும் அழிகின்றன முத்தங்களைத் தவிர தித்திக்காத ஒன்று முத்தமாவதில்லை ஒரு போதும் நாம் முத்தமிட்டுக் கொண்டிருக்கிறோம் ஊழி தூங்கிக் கொண்டிருக்கிறது ஆணைப் பெண்ணும் பெண்ணை ஆணும் மாறி மாறி கடித்துக் கொள்ளும் சம்பவத்திற்கு வேறு பெயர் சூட்டலாமே? |
என் ஊருக்குப் பின்னே ஒரு மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம் வாழ்வைக் கண்டு பிடிக்க இப்படிக் கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை அடிவாரத்தில் ஓர் ஆட்டிடையன் இருக்கிறான் எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம் ஆடென. நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18
Comments