பெசண்ட் நகர்- 9 கி.மீ என்று போட்டிருந்தது. ஒன்பது கிலோ மீட்டர் ஒன்பதே கிலோ மீட்டர் எவ்வளவு அழகான 9 ! பஸ்ஸில் போகலாம் பைக்கில் போகலாம் ஆட்டோவில் போகலாம் வாடகைக் காரில் போகலாம் ஒரு கார் வாங்கி அதில் கூடப் போகலாம் அம்புக் குறி காட்டும் வழியில் எவ்வளவு மெதுவாக நடந்தாலும் அந்திக்குள் அடைந்து விடலாம் ஆனாலும் அந்த ஊரை நீ இப்படி கூவிக் கூவிக் நிறைக்காதே! காதுக்குள் முழக்காதே! |
Comments