Skip to main content

சார், ஒரு சின்ன உதவி

 




ங்கள் முன்

அன்பு வெறுப்பு என்று

இரண்டே இரண்டைக் காட்டினாரே 

அவர் நிஜமாலுமே

அளவற்ற அருளாளனும்

நிகரற்ற அன்புடையோனும்தான்.


அதே அளப்பறிய கருணையாளன்

இதோ…என் முன் 

எண்ணற்ற விதவிதங்களை 

உருட்டி விடுகிறார்


அன்பு போல் தோன்றும் வெறுப்பு

வெறுப்பு போல் தெரியும் அன்பு


அன்புதான் என்று உறுதி சொல்லமுடியாத அன்பு


வெறுப்பென்று இறுதி  செய்துவிட முடியாத  வெறுப்பு


அன்பின் வெள்ளைக்கரு மூடிய

வெறுப்பின் மஞ்சள் கரு


முக்கால் வெறுப்பில் 

துளியூண்டு     அன்பைக் கலந்து  

கடைந்த  ஒன்று


முழு அன்புள்  நெளியும் 

வெறுப்பின் சிறு புழு


அன்பின் ஆடை அவிழ்ந்து விடாமல் 

காக்கும் 

வெறுப்பின் இடைக்கச்சை


வெறுப்பின் வதனத்தில்

அன்பின் அழகிய மைத்தீற்றல்


ரஹ்மான் சார்,

எனக்கு ஒரு நல்வழி காட்டக் கூடாதா?


Comments