பொதுவாகவே குடிகாரன்களை சமாளிப்பது கடினம் அழுகாச்சி குடிகாரனென்றால் அதைவிடக் கடினம் நாசூக்காக கைக்குட்டைக்குள் கண்ணீர் சிந்துபவர்களுக்கு மெதுவாகத் தோளைத் தொட்டால் போதும் குடி முதலில் நாசூக்கைத்தான் குடிக்கிறது ஆகவே அவர்கள் குடம் குடமாகக் கொட்டுவார்கள் ஏன் அழுகிறார்கள் என்பதற்கான காரணத்தை அவ்வளவு துல்லியமாகக் கண்டறிந்துவிட முடியாது என்பதால் ஆறுதலுக்கான சொற்களையும் சரியாகத் தேர்ந்து விட முடியாது இப்படித்தான் இன்று என்னவோ சொல்லப் போய் “ ஆமாம்…நீ அதில் உன் அம்மாவைத் தேடி விட்டாய்…” என்று சொல்லி விட்டேன். பிறகோ மண்ணில் கிடந்து புரளத் துவங்கி விட்டான். |
Comments