Skip to main content

நடக்கக் கூடாதவை நடப்பதில்லை



பெருந்திரள் கூட்டத்தில்

தன் பிள்ளையின்  சுண்டுவிரலை

நைசாகக் கழற்றிவிட்டுவிட்டு

விறுவிறு  வென நடந்து

மறைந்துவிடும்

அன்னையர் சிலர் உண்டு

அவர்களை நாம் அறிவோம்


அந்தக் குழந்தையின்

விழிகள் பிதுங்கி

வாய் கோணுவதை

ஒளிந்திருந்து நோக்கும்

அன்னை ஒருத்தியும்  உண்டு

  

சொன்னால் நீங்கள்

நம்ப மாட்டீர்!

நம்ப விரும்ப மாட்டீர்!


Comments