Skip to main content

சின்னஞ் சிறியனவே! பென்னம் பெரியனவே!

கபிலர் கவித்துவத் திரட்டின் அடுத்த கட்டுரை இன்றைய அகழ் இதழில் வெளியாகியுள்ளது 

மூவாயிரம் ஆண்டுகள் கழித்து இந்தக் கதையின், இதே பாத்திரங்கள், அப்படியே பாத்திரம் மாறாது நமது சினிமாவில் தோன்றினர். “ என்கிட்ட ரெண்டு பொண்ணு இருக்கு… பிடிச்சா கட்டிக்குங்க…” என்று ஒரு தமிழறிஞர் தமாசு செய்தார். கபிலர் என்கிற புலவர்க்குப் பதில் இப்போது பட்டிமன்ற நடுவர். பலரும் ஏற்க மறுக்கும் கட்டங்கரிய பெண்களாக பாரி மகளிர். இவ்வளவும் தற்செயலா? கச்சிதமா? ஒரு இயக்குநரின் தனி மூளையில் உதித்த காட்சியாக இது எனக்குத் தெரியவில்லை. நமது ‘ பெரியோர்கள் பலரும் சேர்ந்து நடத்திய நாடகம் ‘ என்றே எண்ணத் தோன்றுகிறது...

முழுவதும் வாசிப்பதற்கான இணைப்பு  கீழே உள்ளது.

https://akazhonline.com/?p=12062

Comments

Popular posts from this blog

ஒளி வளையத்துள் ஒரு தூசு

மு துகெலும்பு வெளிக்கிளம்ப  தவமியற்றல் அவசியமில்லை. ஞானமடைய  எளிய வழிகள் நிறைய உண்டு அதிலொன்று ICU வில் கிடத்தல் அதுவும் அம்மணமாய்க் கிடத்தல் 'நிர்வாணம் அடைதல் ' என்பதை ஆகச்சிக்கலான தத்துவம் எனக்கருதி பயின்று பயின்று குழம்பிக் கொண்டிருந்தேன். உடலில் ஒன்றுமில்லாதபோது எதிலும் ஒன்றுமில்லை என்பது விளங்கத் துவங்கிவிடுகிறது கண்களில் பீளைகட்டியிருக்கும் போது நன்றாகவே தெரிந்தது என் தலை சுற்றி ஓர்  ஒளி வளையம் கண்ணில் பீளை என்பதால் உதித்த வளையம் என்னால் இப்போது சித்தார்தனுடன்  அமர்ந்து  ஓரளவு உரையாட முடியும் ஆயினும் ஞானத்தின் மீது ஒரு சின்னதூசாய் 'ஹேமா' என்கிற ஒரு  பெயர் நண்பர்காள்.. முந்தைய ஜென்மத்தில் மான்களாகப்   பிறந்தால் மட்டுமே இந்த ஜென்மத்தில் செவிலியராய் பிறக்க இயலும். இது ஒரு ஞானம் அவ்வளவு பெரிய சொல் வேண்டாம் எனில் இது ஒரு உண்மை

கரகரப்பின் மதுரம்

நான் முறைப்படி இசை பயின்றவன் அல்ல. ஆயினும் பாடகன். பெயர் கூட  ‘இசை’. எவ்வளவு திமிர்? தமிழ்நாட்டில் எல்லோரும் பாடகர்தான். தன் வாழ்வில் ஒரு பாடலைக்கூட முணுமுணுத்திராத மனிதஉயிர்என்று எதுவும் இருக்காது. அதுவும் இளையராஜாவின் தேசத்தில் எல்லோரும்தான் பாட வேண்டும். எல்லோரும்தான் பறக்க வேண்டும். பாடல் என்பது கொஞ்சமாகப் பறப்பது. மனிதன் பாதசாரியானாலும் பறக்க விரும்புவன்தான். அவன் அத்தனை நெரிசல்களுக்கிடையே நடந்து நடந்து சலிப்பவன். எனவே சமயங்களில் அத்தனையையும் விட்டுவிட்டு அவன் பறக்கத்தான் வேண்டும்.  நான் பாத்ரூம் ஓட்டை வழியே பறந்து வானத்திற்குப் போய்விடுபவன். என்னை வானத்தில் ஏற்றிவிடும் அம்மையப்பன்  இளையராஜா. எனக்கு ராஜாவின் இசையைப் போலவே அவர் குரலும் அவ்வளவு பிடிக்கும். ஆனால் ஏன் பிடிக்கிறது என்பதுபற்றி இதுவரை யோசித்ததில்லை. ஆராய்ந்து பார்த்ததில்லை. ஆராயவும் தெரியாது.  ஆராயத்தெரியாதுஎன்பது அருவியின் முன் ஒரு சலுகை. குடைந்து குடைந்து நீராட வேண்டியதுதான்.   ராஜாவின் இசையைப் போற்றிப் புகழும் சிலருக்குக்கூட  அவர் குரல் உவப்பானதாய் இருப்பதில்லை. கொஞ்சம் இசை அறிந்த நண்பர் ஒ...

வருக! வருக!

  செ ழு செழுத்துச் சிவந்து நிற்கும் மே ஃப்ளவர் மரத்தை  இந்த அதிகாலையில்  கண்ணுறும்   நாய்க்குட்டி ஒன்று மெல்லென  நாலு குரை குரைக்கிறது  புதிய விருந்தை வரவேற்கும் முகமாய்