சாமீ,
இது துள்ளவே துள்ளாதா
வானத்திற்கும் பூமிக்குமாய் வேண்டாமப்பாஒரு தவளையைப் போலவேனும் துள்ளாதா?
ஓடாதா,
ஒரு ஓட்டை சைக்கிள் போலவேனும்?
தின்று தின்று பெருத்துவிட்டதா
கொஞ்சம் வேகமாகக் கூட நடக்காதா ?
வாழ்கையைப் பற்றி பேசுகையில்
“ நகர்கிறது “ என்று முதன்முதலாய் சொன்ன
அந்த வித்யாபதியைக் காண விரும்புகிறேன்
எனது நான்கு கவிதைத்தொகுப்புகள்,இரு கட்டுரை தொகுதிகள்,
இரண்டு தடித்த நாவல்கள்
யாவற்றையும் உமது காலடியில் வைத்து
தெண்டனிடுகிறேன் ஐயா !
Comments
ரசித்தேன் ஐயா...
தொடர வாழ்த்துக்கள்....