Skip to main content
நீ ஒருக்களித்துச் சாய்ந்திருக்கும் குளக்கரை
உன் குளத்து பொற்றாமரையாக
ஒரு கணம் இருக்கக் கேட்டேன்
ஒரே ஒரு கணம்தான்
அதுவும் இல்லையென்றான நாளில் தான்
குழாயடியின் நீண்ட வரிசையில்
எல்லா குடங்களையும்
இடித்துத் தள்ளிவிட்டு
" ஒரே ஒரு குடம்தானே கேட்டேன்"
என்று கத்தினேன்.
நன்றி : ஆனந்த விகடன்
Comments
மாருதமோ நிந்தன் எழுத்து.
மனப்பரப்பெங்கும் ஊடுருவி
இரத்த நாளங்களில் விரவி
மின்னல் நரம்புகளில் இறுதி
உயிரென உருகி
உள்ளுணர் வீதியின் வெளிச்சங்களைப் பருகி
எந்தன் புலன்களைத் திருகி
இசையென ஜாலமிடுகிறது
நின் எழுத்து...
எழுத வாய்க்கிறது.