மறுநாளை உபத்திரம் செய்யாத
தேர்ந்தெடுக்கப்பட்ட  உயர்ரக மதுப்புட்டி 
கொதிக்கும்  குளிரில் ஒரு குளிர்பானம்
காரத்தில் திளைக்கும் மட்டன் பெப்பர் சுக்கா
முழுக்கவும் மின்னேற்றப்பட்ட
துல்லியமான ஆண்ட்ராயட்
அதில் சுடச்சுட விற்கப்படும் எண்ணற்ற விஷயங்கள்
மறுமுனையில் 
கடமைகளிலிருந்து விடுவிக்கபட்ட நண்பர்கள்
ஒழுக்கத்திற்குத்  தப்பிப் பிழைத்த தோழியர்
சின்ன மகிழ்ச்சியின்  குட்டி முயலை வீழ்த்த
எத்தனை ஆயுதங்களை எறிவாய் கண்ணே !
நன்றி : தினகரன்- தீபாவளி மலர்

Comments